வாழ்வின் அந்தரங்கம்

 

வாழ்வின் அந்தரங்கம்

* டாக்டரம்மா! எனக்கு வயது 22. கல்லூரியில் படித்து வருகிறேன். இது வரை எனது முகத்தில் முடி வளர வில்லை. பெண்களுக்கு இருப்பது போல, முகம் மழு மழு என்று இருக்கிறது. ஆனால், ஆண்மைத்தன்மை குறைய வில்லை. முகத்தில் முடி வளர நான் என்ன செய்ய வேண்டும்?

* இது குடும்ப மரபாக இருக்கலாம். இதனால் பெரிதாக ஒன்றும் பாதிப்பு ஏற்படாது. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்கள். இல்லையேல் மருத்துவரை நாடுங்கள்.!!!.

* டாக்டரம்மா ! எனது கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், என்னை , மற்ற ஆண்கள் யாருடனும் பேச கூட என் கணவர் அனுமதிப்பது இல்லை. எங்கள் சொந்தத்தில் இருந்து யாரேனும் ஆண்கள் வந்தால் கூட. என்னிடம் கடினமாக நடந்து கொள்கிறார். நான் எப்படி அவருடன் குடும்பம் நடத்துவது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் ஆலோசனை கூறவேண்டும்.

* இப்படிப்பட்ட நிலையை, “ MORBID JEALOUSY ” என்று கூறுவார்கள். குடும்பம் நடத்துவதற்கு இந்த நிலைமை பாதிப்பு ஏற்படாதபடி நீங்கள் உங்கள் நடை, உடை, பாவனையில்( BODY LANGUAGE )”-ல் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பிற ஆண்கள் அல்லது உங்கள் உறவுக்கார ஆண்கள் வரும் போது, விரைவாக பேசி, OFFICECIAL
- ஆக பேசுங்கள்.!!!.

* டாக்டரம்மா! எனக்கு 45 வயதாகி விட்டது. எனது கணவருக்கு 50 வயது ஆகிறது. இன்னும் எங்களுக்கு குழந்தை இல்லை. எனது கர்ப்ப்பையில் கோளாறு இருப்பதால், கர்ப்பம் தரிக்க வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நான் என் கணவர் மூலம் கர்ப்பம் தரிக்க முடியாதா?

* நீங்கள் உங்கள் கணவர் மூலமே குழந்தை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவத்தில், குழந்தை பேறு பிரிவில் மிகப்பெரிய புரட்சியே நடந்து கொண்டு வருகிறது. மிகவும் முன்னேறி விட்ட இந்த துறையின் மூலம் உங்கள் விருப்பப் படியே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.!!!.

* இப்போதுள்ள காலத்தில் சிறுவன் கூட , பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறான். 15 வயது சிறுமி, தவறுதலாக கருத்தரித்து விடுகிறாள். முற்காலத்தில் இது போன்ற காரியங்கள் நடந்தது இல்லை. உங்கள் கருத்து என்ன?

* பாலியல் குற்றங்கள் என்பது, எல்லா காலத்திற்கும் பொதுவானதுதான். முன்பெல்லாம், சிறு வயதிலேயே பாலியல் உணர்வுகள் உடலில் உருவாகும் போதே, திருமணம் செய்து வைத்து விடுவார்கள். எனவே, பாலியல் உணர்வு வெளிப்பாடுகள், குற்றங்களாக மாறுவதற்கான வய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. இப்போது பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் திருமணமே தள்ளிப்போகிறது. எனவே சமூக ரீதியாக சில இடங்களில் குற்றங்கள் நடந்து விடுகின்றன. எனவே, இக்கால இளைஞிகளும், இளைஞர்களும்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.!!!.

 
 
 
 

This post has been viewed 198 times