மின்மினிச் செய்திகள்

 

மின்மினிச் செய்திகள்

காபியா? டீயா?

காலையில் எழுந்ததும் எல்லோருக்கும் காபி குடிக்கும் பழக்கம் உண்டு. சிலர் டீ குடிப்பார்கள். இதில் காபி நல்லதா? டீ நல்லதா? என பார்த்தால், காபியை விட டீ நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

1483802247Tea

டீ குடித்தால், சிலவகை புற்று நோய்களும், இதய நோயும் ஏற்படாது என்ற மருத்துவ கருத்து நிலவுகிறது. அதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை டீ குறைக்கும் என்றும் தெரிய வருகிறது. காபியில் காபின் என்ற பொருள் இருப்பதால்,. அதனை அதிகம் குடிக்காமல் தவிர்ப்பது நல்லது.!!!.

pp-hot-coffee-rf-istock

திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள்…

*திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன. திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

tirullura
*திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
*திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
*திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
*திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 முடிகிறது.
*திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250.!!!.

தாடியின் நீளம் 30 அடி

ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வேகமாக வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

bella-barba-hipster

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.!!!.

உப்பு பற்றிய சில சுவையான தகவல்கள்

* நாம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பு. இதில் ஒரு குளோரின் அணுவுடன், 23 பங்கு சோடியம் அணுக்கள் இணைந்திருக்கும்.

906_bigstock-sea-salt-34380128

* மனிதன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உப்பை பயன்படுத்தி இருக்கிறான். 3500 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய ஓவியத்தில் உப்பு தயாரிக்கும் முறை சான்றாக கிடைத்துள்ளது. சகாரா பாலைவனத்தில் உப்பு படிவுகளை அவர்கள் வெட்டி எடுத்து வணிகம் செய்துள்ளார்கள்.

* இறந்தவர்களின் உடலை பாதுகாக்க முதன்முதலில் உப்பை பயன் படுத்தியவர்களும் எகிப்தியர்களே. சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் ஆகிய 4 உப்புக்களின் கலவை ‘நார்டான்’ எனப்படுகிறது. இதைக் கொண்டுதான் அவர்கள் ‘மம்மி’க்களை பாதுகாத்தனர்…!!!.

 
 
 

1 Comment

  1. madhavaraman says:

    வாழ்வியலுக்கு உகந்த மிகவும் பயனுள்ள தகவல்களை தாங்கி வரும் மின் மினி செய்திகள் மிகவும் அருமை. சத்தியம் வார இதழுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்..

 

This post has been viewed 261 times