போலீஸ் கிரைம்

 

போலீஸ் கிரைம்

தண்டவாளத்தில் இருவர் பிணம்.,
மர்மம் என்ன?

நாகர்கோவில் அருகே கட்டையன் விளை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது நண்பர் கேசவதிருப்பபுரம் பகுதியை சேர்ந்த ஜான் ராஜ். இவர்கள் இருவரும் பார்வதிபுரம் அருகே உணவு விடுதி நடத்தி வந்தனர்.

download

இந்நிலையில் ஆக.28-ம் தேதி, ஜான் ராஜ் ,பிரபாகரன் இருவரும் பார்வதிபுரம் அருகே உள்ள தண்டவாளத்தின் அருகில் அடையாளம் தெரியாத ஒருவருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பிரபாகரன் மற்றும் ஜான் ராஜ் மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளம் அருகே இறந்து கிடந்துள்ளனர்.

தகவலறிந்து வந்த வடசேரி காவல்துறையினர் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார்களா? என்று, வடச்சேரி காவல்துறையினர் விசாரணை வருகின்றனர்.

போலி இருப்பிட சான்று கொடுத்து மருத்துவ
படிப்பில் சேர முயற்சி: போலீஸ் விசாரணை

சென்னையில் நடந்த “நீட்”தேர்வு மார்க் அடிப்படையிலான மருத்துவ கலந்தாய்வில், கேரள மாணவர்கள் 7 பேர் போலியான முகவரியை கொடுத்து சேர முயற்சித்ததும், அதில் 3 பேர் சேர்ந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவர்களது இருப்பிட சான்றிதழை சரிபார்த்த போது, அவர்கள் கேரளாவில் நடைபெற்ற கவுன்சலிங்கிலும் கலந்து கொண்டது தெரியவந்தது.25-1503664966-counsliinngg-sd-s600

விசாரணையில் போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று அதை வைத்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர முற்பட்டது தெரியவந்தது. மொத்தம் 7 மாணவர்கள் போலியாக முகவரி சான்றிதழ் அளித்ததும், அதில் 3 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களுக்கு போலியாக சான்றிதழ் வழங்கிய அதிகாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.!!!.

 
 
 
 

This post has been viewed 98 times