சத்தியம் பதில்கள்

 

 சத்தியம் பதில்கள்

( சந்திரன், சென்னை):

அதிமுக-வின் இரு அணிகளும் இணைந்து விட்டதால், ஜெயலலிதா காலத்து அதிமுக உருவாகி விட்டது என்று கூறலாமா?

இன்னும் தினகரன் அணியினர் இணைய வில்லை. தினகரன் அணியினர் சேர்ந்தால்தான், முழு பலம் பொருந்திய அதிமுக என்று கூறலாம். பார்க்கலாம்., என்ன நடக்கப் போகிறது என்பதை!!!.

(பரணீதரன், செங்கல்பட்டு):

தமிழகத்தில், அதிமுக ஆட்சி, இன்னும் 4 ஆண்டுகாலத்தை நிறைவு செய்து விடுமா?

இப்போதுள்ள சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். நிரூபித்து விட்டால், ஆட்சி நீடிக்கும்.!!!.

( ராஜ்குமார், திருநெல்வேலி):

தமிழகத்துக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வந்தால், அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று கூறுகிறார்களே!

அமித்ஷா முன்னிலையில், சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஜக-வில் சேர இருப்பதாக தகவல். இப்போதே இதற்கான வேலைகள் தொடங்கி விட்டன.!!!.

( ரெங்கசாமி, சென்னை):

நீட் மருத்துவ தேர்வு பிரச்சினையில், மத்திய அரசு தமிழக அரசை ஏமாற்றி விட்டது என்று கூறலாமா?

முதலில் அவசர சட்ட வரைவு அனுப்பும் படி சொன்னதும் மத்திய உள்துறைதான். பின்னர் “முடியாது” என்று மறுத்ததும் மத்திய உள்துறைதான். ஏமாந்தது, தமிழக மாணவர்கள்..!!!.
( தமிழ்துரை):

தமிழத்தில் சட்டம்–ஒழுங்கு, அமைதியாக இருக்கிறது என்று கூறலாமா?

சட்டம்-ஒழுங்கு அமைதியாகத்தான் இருக்கிறது. ஆட்சிதான் பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாகி தவிக்கிறது.!!!.

( ரவிச்சந்தர், மதுரை):

2019-வது ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா?

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பின், தேசிய ஜனநாயக கூட்டணி , ஆட்சிக்கு வந்தது. அது போல, இவர்களும் 10 ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள். அதாவது, அடுத்த தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.!!!.

( செந்தில், சென்னை) :

தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிக்பாஸ் “ நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில பெண்கள் அரைகுறை ஆடையுடனும், நீச்சல் குள காட்சியும் தேவையா?

எல்லாமே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதல் நிலை பெற வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட சேனல் செய்யும் வேலை இது. இதனை நேயர்கள் எல்லோரும் ஏற்கிறார்களா? என்பது அடுத்த கேள்வியாக அமைகிறது.!!!.

( தாஸ், கோவை):

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்? முடிவு எப்படி இருக்கும் ?

உள்ளாட்சி தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் வரலாம். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும். முடிவுகள் கேள்விக்குறியாகவே இருக்கும்.!!!.

 
 
 

1 Comment

  1. madhavaraman says:

    சத்தியம் பதில்கள் பகுதியில் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில் யதார்த்தமாகவும் யாரையும் புண்படுத்தாதவாறும் இருப்பது குறிப்பிடத்தக்கது.நன்றிகள்..

 

This post has been viewed 154 times