துளிர் செய்திகள்

 

துளிர் செய்திகள்

ஸ்டாலின் உட்பட  21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின்போது, தடை செய்யப்பட்ட குட்காவை கடந்த ஜூலை 19- ம் தேதி பேரவைக்குள் கொண்டு வந்தனர் என கூறி, திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் புகார் எழுந்தது.

nDMLrtfC_400x400

 

இதனை தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உரிமைக்குழு கூட்டம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், தடை செய்யப்பட்ட குட்காவை பேரவைக்கு கொண்டு வந்தது பற்றி விளக்கம் தர வேண்டும் என கூறி, மு.க.ஸ்டாலின் உட்பட 21 திமுக எம்எல்ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் செப்டம்பர் 5-ம் தேதிக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.!!!..

பாஜக தலைவர்களை அவதூறாக பேசியதாக
நாஞ்சில் சம்பத் மீது வழக்கு பதிவு

திருவள்ளூர் மாவட்ட பாஜக தலைவரான லோகநாதன் என்பவர் சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில், “அதிமுக அம்மா கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத், எங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தாக்கி தரக்குறைவாக மிகவும் இழிவாக, அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் பேசி வருகிறார்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ss

 

இந்த புகார் தொடர்பாக பட்டினபாக்கம் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் நாஞ்சில் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளார். இதனால் நாஞ்சில் சம்பத் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.!!!..

“முத்தலாக்” வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு மிரட்டல்

முஸ்லிம்கள் மூன்று முறை ‘தலாக் சொல்லி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Muthalak

முஸ்லிம்கள் மூன்று முறை ‘தலாக் சொல்லி விவாகரத்து செய்வது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 22–ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கை தொடர்ந்த 5 முஸ்லிம் பெண்களில் ஒருவர், இஷ்ரத் ஜகான்.

மேற்கு வங்காளத்தில் குடியிருக்கும் அவர், “தீர்ப்பு வெளியானதில் இருந்து எனக்கும், என் குழந்தைகளுக்கும், அண்டை வீட்டாரும், எனது உறவினர்களும் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள்” என்று மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, கடிதம் எழுதியுள்ளார்…!!!.

மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடக்கோரி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “முதல் அமைச்சர் பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை 19 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.

madras-high-court759

எனவே தற்போதைய அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க, வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். “ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.!!!.

முதல்வருடனும், ஸ்டாலினுடனும்
3 எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

முதல்வர் பழனிச்சாமியுடனும், திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடனும், 3 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

download (1)

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மக்கள் ஜனநாயக கட்சி தமிமுன் அன்சாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் மூவரும் இப்போது ஒருமித்து செயல்பட்டு வருகிறார்கள். மூவரும், சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,” பா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு பலியாகி விடக்கூடாது.

தமிழக சட்டசபையில் பலப்பரீட்சை நடந்தால், யாருக்கு ஆதரவு அளிப்போம் என்பதை பின்னர் அறிவிப்போம்” என தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் மூவரும், முதல்வர் பழனிச்சாமியை தனித்தனியே சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், “தினகரன் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேச வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

முதல்வரை சந்தித்த பின், மூவரும் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க சென்றனர். அறிவாலயத்தில் இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது…!!!.

 
 
 
 

This post has been viewed 224 times