யாதும் ஊரே

 

 யாதும் ஊரே

400 வருடங்களுக்கு முன்னரே ஐபோன்: வெளியான ஆதாரம்

400 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வாழ்ந்த மக்கள் இருக்கும் ஓவியத்தில் உள்ள நபரின் கையில் ஐபோன் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (4)

“காலப்பயணம்” என்பது மனிதர்கள் முந்தைய காலத்துக்கும் அல்லது வருங்காலத்துக்கும் சென்று வாழ்வதை குறிக்கும்.இது சம்மந்தமான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக கண்டுப்பிடிக்கப்பட்ட “ஐபோன்” 400 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உமர்டோ ரோமனோ என்ற ஓவியர் கடந்த 1937-ல் அமெரிக்கர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தார்கள் என்ற ஓவியத்தை வரைந்துள்ளார். அந்த ஓவியத்தில் கூட்டமாக மக்கள் உள்ளனர். அதில் உட்கார்ந்திருந்த நிலையில் இருக்கும் ஒருவர் கையில் ஒரு பொருளை வைத்து இயக்குவது போல உள்ளது.

அந்த பொருளானது “ஐபோன்” என கூறப்படுகிறது, பார்ப்பதற்கும் அப்படி தான் உள்ளது என்பது முக்கிய விஷயமாகும். இந்த ஓவியம் அமெரிக்காவில் உள்ள தேசிய தபால் அருங்காட்சியகத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது.
இது உண்மையான ஓவியம் எனவும், திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. காலப்பயணம் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர்களுக்கு இந்த விஷயம் இன்னும் உதவியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.!!!.

நடுகடலில் இரண்டாக பிளந்த கப்பல்

கருப்பு கடல் பகுதியில் மங்கோலிய சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் இரண்டாக பிளந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

439B377500000578-0-image-a-32_1503833405730

”தி லினரண்டோ” என்ற மங்கோலிய சரக்கு கப்பல் 114மீட்டர் நீளமானது. நடுகடலில் நங்கூரமிடப்பட்டுருந்த அந்த கப்பல், திடீரென இரண்டாக பிளந்தது. அந்த கப்பலில் இருந்த 11 ஊழியர்களை துருக்கி துறைமுக அதிகாரிகள் விரைந்து மீட்டனர்.

ஆனால், கப்பலின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கியது. அந்த கப்பல் தனது பயணத்தை தொடங்கி 42 ஆண்டுகள் ஆனதால் இவ்வாறு நடந்திருக்ககூடும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.!!!.

13,000 ஆண்டுக்கு முன்பு உயிரிழந்த பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு

13,000 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் மெக்சிகோவில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

old-1-300x178

விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களுக்கு முன்னர் இறந்தவர்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் ,மெக்சிகோவில் உள்ள துலீம் நகரில் உள்ள தண்ணீருக்கு கீழ் இருக்கும் குகை ஒன்றில் 13,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த 16 வயதில் உயிரிழந்த இளம்பெண்ணின் முழு எலும்பு கூட்டை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2007ல் இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டாலும், பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் வெளியுலகுக்கு இது பற்றி கூறியுள்ளனர், ஆராய்ச்சியாளர்கள்.!!!.

மருந்து கொடுத்து நோயாளிகளை போட்டு தள்ளிய ஆண் செவிலியர்!!

ஜெர்மனியில் ஆண் செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்தை அளித்து 86 பேரை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Masern_Impfen_dpa_13Feb2009

நீல்ஸ் ஹீகல் என்பவர் பல வருடங்களாக மருத்துவதுறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது விபரீத ஆசைக்காக சுமார் 90 நோயாளிகளுக்கு மாரடைப்பு வரும் மருந்துகளைக் கொடுத்து, பிறகு தன் சொந்த முயற்சியில் நோயாளிகளை குணப்படுத்த முற்பட்டுள்ளார்.

ஆனால், இதில் பலரும் இறந்துள்ளனர். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அவர் விசாரணையின் போது கூறிய செய்திகள் வெளியாகியுள்ளது.

நீல்ஸ், நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் மருந்தை ஊசி மூலம் ஏற்றி பிறகு அவர்களைப் பிழைக்க வைப்பதில் தனக்கு த்ரில் இருந்ததாகவும், ஹீரோ ஆகும் விருப்பம் தன்னிடம் இருந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, 134 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் 84 பேர் இவரால் இறந்தவர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.!!!.

 
 
 
 

This post has been viewed 169 times