சினிமா செய்திகள்

 

சினிமா செய்திகள்

தரமணியில் கலக்கிய அஞ்சலி! இப்போ எங்கே?

சமீபத்தில் மிகவும் பாசிட்டிவான விமர்சனங்களை சந்தித்த ஒரு படம்,”தரமணி”. இதில் அஞ்சலி, சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்., அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது.

Anjali_photoshoot_in_white_top_stills_04

ஒரு பக்கம் ஜெய் – அஞ்சலி காதல் போய்க்கொண்டிருக்கிறது. இவர்களின் திருமணம் எப்போது என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இணைந்து நடித்துள்ள “பலூன்” படம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

தற்போது ,”அஞ்சலி” மலையாளத்தில் “ரோசாப்பூ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 23-ம் தேதி எர்ணாகுளத்தில் ஆரம்பமாகியுள்ளது. இவரின் ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்குமாம். மேலும் மலையாளத்தில் அவர் எண்ட்ரி கொடுக்கும் முதல் படமும் இதுவே.

நடிகை நயன்தாரா, அனுஷ்காவுக்கு இப்படி ஒரு அதிரடி படமா?

கோலிவுட்டின் மாஸ் ஹீரோயினான நயன்தாரா, அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சில படங்கள் வெளியாக வில்லை என கூறுகிறார்.

7--anushka-shetty

“டோரா”வை தொடர்ந்து, அவர் சோலோ ஹீரோயினாக இறங்கிய படங்கள் “கொலையுதிர்காலம்”, “அறம்” ஆகிய படங்கள் தயாராயிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், சிறையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் இயக்க இருக்கிறாராம்.

pkulLDdbfddgi

சமீபத்தில் பெங்களூரு சிறையில் முறைகேடுகள், சசிகலாவிற்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர், டிஐஜி ரூபா. அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த கரு சினிமாவாக ஆகிறது.
இதற்கு ரூபாவும் “ஓ.கே” சொல்லிவிட்டாராம். இதில் நயன்தாரா அல்லது அனுஷ்கா நடிப்பார்கள் என இயக்குனர்கள் சொல்லியிருக்கிறார்களாம்.

விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

விஜய் நடிப்பில் உருவாகிவரும் “மெர்சல்” படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தற்போது வந்துள்ள அறிவிப்பு, ரசிகர்களை மகிழ்ச்சியடைய ச் செய்துள்ளது.

vij110

இப்படத்தில் இடம் பெறும் ‘நீதானே…’ மற்றும் ‘மெர்சல் அரசன்…’ ஆகிய பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி மெர்சல் படத்தின் டீசரும் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஆட்டம் போடும்  சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. தல, தளபதி ரசிகர்களுக்கும் கூட சிவாவை மிகவும் பிடிக்கும். அவரது நடிப்பில் செப்டம்பர் 29-ல் “வேலைக்காரன்” வெளியாகவுள்ளது.

Cui6ZwSWYAE15eR

மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ஒரு பாடல் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடல் முழுக்க தாரை தப்பட்டை தான்.

அனிருத் குரலில் பாடலை மாஸாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கமெண்ட்கள் பறக்கிறது. அப்பாடலில் லிரிக் வீடியோவும் வெளியாகியுள்ளது.

அப்பாடலில் சில வரிகள்…

கருத்தவன்லாம் கலிஜ்ஜாம், கிளப்பி விட்டாங்க…
அந்த கருத்த மாத்து கொய்யால…
ஹேய் உழச்சவன்லாம் நம்மாளு, ஒதுங்கி நிக்காத…
வா வா தெறிக்கவுடு கொய்யால…

 
 
 
 

This post has been viewed 328 times