அனிதாவின் மரணத்துக்கு யார் பொறுப்பு?

 

அனிதாவின் மரணத்துக்கு

யார் பொறுப்பு?

தமிழகத்தில் ஒரு சிறு மலர், தனது குறிக்கோள் நிறைவேறாததால், தன்னைத்தானே அழித்துக் கொண்டு விட்டது. அந்த சிறு மலரின் பெயர்தான்: அனிதா. 17 வயதான அந்த இளம் தளிர், பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தார்.

anitha-neet_650x400_61504337399

ஏழை தலித் குடும்பத்தில் பிறந்த இவரது மருத்துவ கட்-ஆப்: 196.75. தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ பொதுத் தேர்வான “நீட்” தேர்வு கட்-ஆப் படியே, மருத்துவ படிப்புக்கான இடங்கள் நிரப்பட்டதால், அனிதாவுக்கு மருத்துவ “சீட்” கிடைக்க வில்லை. காரணம், அவர் “நீட்” தேர்வில் போதிய கட்-ஆப் பெற வில்லை. அனிதாவின் மருத்துவ கனவு காற்றோடு கலந்து போயிற்று., அனிதாவும் காற்றோடு கலந்து போய் விட்டாள்.

இன்று அனிதா உயிரோடு இல்லை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் அவள் வழக்கு தொடர்ந்து, அதிலும் பயன் இல்லாத நிலை ஏற்பட்ட போது, இந்த ஏழை சிறுமியின் பக்கம் நாம் எத்தனை பேர் நின்று குரல் கொடுத்தோம்? தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய பணக்காரர்கள், அல்லது அரசியல் தலைவர்கள் அல்லது தமிழகத்தில் இருக்கும் ஏதாவது தனியார் மருத்துவ கல்லூரி அதிபர்கள், அனிதாவுக்கு கை கொடுக்க முன் வந்து இருந்தால், இன்று அந்த ஏழை மாணவியின் உயிர் பரலோகம் சென்று இருக்காது.

அனிதாவின் மரணத்துக்கு பிறகு, நாம் வேதனைப்பட்டு இருக்கிறோம். அனிதாவின் குக்கிராமத்துக்கு அலை அலையாக சென்று மலர் மாலைகள் வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். இதனால், மாண்டு போன அனிதாவின் உயிர் மீண்டு வரப்போவதில்லை என்றாலும், இது போன்ற தளிர்கள் இனியும் மரணத்தை சந்திக்காமல் இருக்க நாம் என்ன செய்ய இருக்கிறோம்? என்பதும் முக்கியம்.

ஆட்சியை, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சமூகத்தை, ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? மத்திய-மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தியுங்கள். அனிதா, மரண வாசலுக்குள் சென்று விட காரணம் யார்? இதற்கு யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள்? சிந்தியுங்கள்., செயல்படுங்கள்…!!!.

 
 
 
 

This post has been viewed 145 times