வாழ்வின் அந்தரங்கம்

 

 வாழ்வின் அந்தரங்கம்

* டாக்டரம்மா…! 30 வயதான எனக்கு திருமணமாகி விட்டது. நான் நல்ல சிவப்பு. என் கணவர் நல்ல கறுப்பு. எங்களுக்கு பிறந்த குழந்தை, எனது கணவர் போல கறுப்பாக இருக்கிறது. இது எனது மகளுக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது. அவளது மன நிலையை எப்படி மாற்றுவது?

* இது, நாளடைவில் சரியாகி விடும்.!!!.

* டாக்டரம்மா! கல்லூரியில் பிடிக்கும் எனக்கு 20 வயதுதான் ஆகிறது. ஆனால் என் பெற்றோர் இப்போதே எனக்கு திருமணத்துக்கு ஏற்பாடுசெய்து விட்டார்கள். அவர்கள் பார்த்து இருக்கும் பணக்கார மாப்பிள்ளைக்கு வயது 39 ஆகிறது. எனக்கும் அவருக்கும் 19 வயது வித்தியாசம். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. பணக்கார குடும்பம் என்பதால் எனது பெற்றோர், அவருக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறார்கள். உங்கள் ஆலோசனை என்ன?

* “இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை”என்று உங்கள் பெற்றோரிடம் தெளிவாக கூறுங்கள். “24 வயதுக்கு பிறகு திருமணம் செய்து கொள்கிறேன்” என்பதையும் உங்கள் பெற்றோரிடம் தெளிவு படுத்துங்கள். இப்போதைய திருமணத்தை நிறுத்தும் படியும் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் உறுதியாக கூறலாம்..!!!.

* எனது மகளுக்கு சிறு வயதில் இருதய ஆபரேஷன் நடந்தது. இப்போது அவள் திருமண வயதுக்கு வந்து விட்டாள். அவளுக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கலாமா?

* மருத்துவ ரீதியாக இப்படிப்பட்டவர்கள் திருமணம் செய்து கொள்வதில் பிரச்சினை இல்லை. திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கலாம். மாப்பிள்ளை வீட்டாரிடம் , உங்களுக்கு சிறு வயதில் நடந்த இதய ஆபரேஷன் பற்றி தெளிவாக கூறி விடவும்.!!!.

* 28 வயதான எனது கணவர் வெளிநாட்டில் பணி புரிந்துவருகிறார்..நான் எனது 5 வயது மகளுடன் எனது தாயாருடன் வாழ்ந்து வருகிறேன். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். எனது அலுவலகத்தில் சில ஆண்கள், எனது கணவர் என்னுடன் இல்லாத்தை அறிந்து, என்னை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு என்னிடம் பழகுகிறார்கள். தவறு நேர்ந்துவிடுமோ? என்று நான் பயப்படுகிறேன். எனக்கு ஆலோசனை கூறுங்கள்.

* இப்படிப்பட்ட சூழ்நிலையை முழுமையாக தவிர்க்கவும். வேலையையும் விட்டு விடவும்.!!!.

 
 
 
 

This post has been viewed 258 times