மின்மினிச் செய்திகள்

 

மின்மினிச் செய்திகள்

உப்பு பற்றிய சுவையான தகவல்கள்

உப்பு என்றால் தெரியுமா? என்று உங்களிடம் கேட்டால், ‘உணவில் சுவைக்கு சேர்ப்பார்களே அதுதானே உப்பு’ என்று பதில் சொல்வீர்கள். அது பாதிதான் சரியான பதில். உணவில் சேர்ப்பது உப்பின் ஒரு வகை. ‘அமிலத்தில் அல்லது நீரில் கரையும் எந்தப் பொருளும் உப்பு’ என்று வகைப்படுத்துகிறார்கள் வேதியியல் விஞ்ஞானிகள். ஏராளமான உப்பு வகைகள் இருக்கிறது.

Salt-014-1024x614

* கடல் நீரில் இருந்து உப்பு பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் ஜெர்மானியர்கள்.

* வெனிஸ் நாட்டிற்கும் ஜெனோவாவுக்கும் இடையே 1482 –1484 சமயத்தில் போர் நடந்தது. ‘பெர்ராரா போர்’ என அழைக்கப்படும் இந்தப் போருக்கு ‘உப்பு போர்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. பல்வேறு அரசியல் காரணங்களுக்கு இடையில், உப்பு வணிகத்தில் ஏற்பட்ட பகையும் இந்த போருக்கு காரணம் என்பதால் அப்படி ஒரு பெயர்.

* இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிக உப்பு உற்பத்தி செய்யப் படுகிறது. இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்கு. தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகுதியாக உப்பு உற்பத்தி நடக்கிறது. இந்தியாவில் இமாசல பிரதேசத்தின் மாண்டி பகுதியில் பாறைகளில் இருந்து உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.

salt-91539_1920

* முதன் முதலாக உப்பில் அயோடின் (1924-ல்) கலந்து விற்பனை செய்தவர்கள் அமெரிக்காவின் ‘மார்டான் சால்ட்’ என்ற உப்பு நிறுவனத்தினர்தான்.
உப்புத்தண்ணீர்

*பட்டுத்துணிகளை துவைக்கும் போது, உப்பு கலந்த தண்ணீரில் அலசினால், பட்டுத்துணை “பள பள” என்று மின்னும்.!!!.

திருக்குறள் பற்றிய சுவையான

தகவல்கள்…

*ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.

*திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000.

thirukural-palm-leaves

*திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194.

*திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை.

*திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை.

*திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்.

*திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி.

*திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங.

*திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.

*திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்.

*திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.

*ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.

*திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளிவந்துள்ளது.

*திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.!!!.

 

 
 
 
 

This post has been viewed 179 times