போலீஸ் கிரைம்

 

குடித்து விட்டு தொல்லை கொடுத்த

கணவனை வெட்டிக்கொன்ற மனைவி

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கணவனின் குடி தொல்லை தாங்கமுடியாமல், கணவனை மனைவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

murder-2

சாயல்குடியை சேர்ந்த ராமமூர்த்தி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதும், மனைவியை அடித்து துன்புறுத்துவதுமாக இருந்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறூமை இழந்த அவரது மனைவி வாசுகி, கணவனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு, சாயல்குடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். மனைவியே கணவனை வெட்டி படுகொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!!!.

வெளி நில பெண் மரணத்தில்  மர்மம் : தூக்கில் தொங்கியபடி பிணம்

திருப்பூரில் காட்டுப்பகுதியில், வெளி மாநிலத்தைச்சேர்ந்த பெண் ஒருவர் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கருதப்படுகிறது.

girl-030917-seithyindia

திருப்பூர் நெரிப்பெருச்சல் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் வெளி மாநிலத்தைச்சேர்ந்த ஏராளமான ஆண்- பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் . இந்நிலையில், நெரிப்பெருச்சல் பகுதிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க வெளி மாநிலத்தைச்சேர்ந்த பெண் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து, அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு கொலையா? தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.!!!.

 
 
 
 

This post has been viewed 123 times