சத்தியம் பதில்கள்

 

சத்தியம் பதில்கள்

( தமிழரசன்,சென்னை):
“தர்ம யுத்தம் நடத்துகிறேன்” என்று கூறிய ஓ. பன்னீர் செல்வம்,. முதல்வர் எடப்பாடியுடன் கைகோர்த்து விட்டாரே., அவரது தர்ம யுத்தம் என்னவாயிற்று?

அவரைப்பொறுத்த அளவில், தர்ம யுத்தம் வெற்றிகரமாக முடிந்து விட்டது. அவருக்கு முதல்வர் பதவியும், மாபா-வுக்கு அமைச்சர் பதவியும் கிடைத்து விட்டது. இனி காலப்போக்கில்தான் அவரது செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்.!!!.

( ராஜேஸ்வர், மதுரை):
தினகரனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நாளிதழையும், தொலைக்காட்சியையும், எடப்பாடியால் கைப்பற்ற முடியுமா?

இரண்டும் தனியார் நிறுவனங்கள். அவற்றை கைப்பற்ற முடியாது என்பதே கருத்து.!!!.

( திரையழகி, சென்னை):
பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் பேசுவாரா? தீவிர அரசியலில் ஈடுபடுவாரா?

போகிற போக்கைப்பார்த்தால், சோனியா காந்திக்கு பின், பிரியங்கா காங்கிரஸ் கட்சிக்கு வந்து, ராகுலுடன் கைகோர்த்தால்தான் காங்கிரசை இனிவரும் காலங்களில் காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகி விட்டது என்பதே உண்மை. எனவே அவர் அரசியலுக்கு வருவது காங்கிரசுக்கு நல்லது.!!!.

( தாமோதரன், செங்கை):

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், எல்லா போலீஸ் நிலையங்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டது சரியா?

நடைமுறை படி பார்த்தால், அவரது உத்தரவு தவறுதான். ஆனால், இப்போது நடைமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கிறதே. எனவே, முதல்வர் உத்தரவுக்கு எல்லா போலீஸ் நிலைய அதிகாரிகளும் கட்டுப்பட்டு, கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடி இருக்கிறார்கள்( ஆட்டம்-பாட்டத்துடன்).!!!.

( தங்க தமிழ்செல்வி, செந்துரை):
காவிரியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் 5912 கோடி செலவில் கர்நாடகம் புதிய அணை கட்ட இருக்கிறதே., நாமும் இது போல அணையை கட்டலாமே?

நாம் கேரளாவில் இருந்து வரும் ஆறுகளையும், கர்நாடகத்தில் இருந்து வரும் ஆறுகளையும், ஆந்திராவில் இருந்து வரும் ஆறுகளைத்தான் நம்பி இருக்கிறோம். மழைகாலங்களில் நமக்கு கிடைக்கும் தண்ணீரை சேமிக்க கூடுதல் அணைகள் அவசியம்..!!!.

( ரவிக்குமார், கோவை):
சமீப காலமாக பாட்டாளி மக்கள் கட்சி பெரிய அளவில் போராட்டங்களை நடத்த வில்லையே., ஏன்?

மருத்துவர் ராமதாசும், அவரது மகன் அன்பு மணியும் எல்லா பிரச்சினைகளுக்கும் அறிக்கைகளை கொடுக்கிறார்களே தவிர, நேரடி கள போராட்டங்கள் குறைவுதான். தேர்தல் வரட்டும்., அப்போது பாருங்கள்.!!!.

( சந்திரன், சென்னை):
பூடான் எல்லையில் டோக்லம் பகுதியில் சீன அத்துமீறலுக்கு தீர்வு கண்ட பிரதமர் மோடியால், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடிய வில்லையே, ஏன்?

டோக்லம் பிரச்சினை, இப்போது உருவான புதிய பிரச்சினை. காஷ்மீர் பிரச்சினை ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் பிரச்சினை. காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பது என்பது, கடலுக்கு அணை போடுவது போல்தான்.!!!.

( தமிழச்சி, மதுரை):
முதுமை பருவத்தில் இருக்கும் கருணாநிதியை பார்த்து உடல் நலம் விசாரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஸ்டாலினை மிகவும் பாராட்டி பேசி இருக்கிறாரே? ஒருவேளை திமுக அணிக்கு ஆதரவு அளித்து விடுவாரோ, வைகோ?

அரசியலில் நிரந்தர பகைவனும் இல்லை., நண்பனும் இல்லை. என்றாலும், எந்த ஒரு மகனின் வளர்ச்சியை மனதில் கொண்டு அன்று வைகோவை, கட்சியை விட்டு கருணாநிதி நீக்கினாரோ, அதே மகன், இன்று வைகோவுடன் கை கோர்ப்பாரா? என்பது கேள்விக்குறிதான்.!!!.

 
 
 
 

This post has been viewed 139 times