“எந்த ஒரு தனி நபரையும், ஜெயலலிதா தனது அரசியல் வாரிசாக அறிவிக்கவில்லை

 

“எந்த ஒரு தனி நபரையும், ஜெயலலிதா

தனது அரசியல் வாரிசாக அறிவிக்கவில்லை

“எந்த ஒரு தனி நபரையும் ஜெயலலிதா அரசியல் வாரிசாக அறிவிக்கவில்லை” என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

jaya_bccl

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள பஞ்செட்டி பகுதியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, திருவள்ளூர், தொழிற்சாலை மாவட்டமாக திகழ்கிறது எனவும், திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். 3 ஆயிரத்து 375 கோடி மதிப்பில் கப்பல் கட்டுமானக் கழகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என கூறிய அவர் மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதிமுக அரசு செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் இடம்பெறும் சிறப்பு தபால்தலையை முதலமைச்சர் வெளியிட்டார். இதன் பின் பேசிய அவர், “ சுயநலத்திற்காக யாரும் அதிமுகவை கூறுபோட விடமாட்டோம். சிலர் பின்வாசல் வழியே ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள்., அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள்.” என்று அவர் கூறினார்.!!!.

 
 
 

1 Comment

  1. madhavaraman says:

    தனது கட்சி எம் எல் ஏக்கள் மீது நம்பிக்கையும் கட்சியின் மீது பாசமும் வைத்திருக்கும் எடப்பாடியார் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடலாமே?

 

This post has been viewed 216 times