துளிர் செய்திகள்

 

துளிர் செய்திகள்

சேலம் வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து

நெடுவாசல், கதிராமங்கலத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் விநியோகித்து, மாணவர்களைப் போராட தூண்டியதாக கடந்த ஜூலை 13 -ம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை சேலம் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர் கடந்த மாதம் 17 -ம் தேதி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து, அவரது தந்தை மாதையன் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

a816

அமைதியான முறையில் போராடிய எனது மகளை அரசியல் காரணங்களுக்காக குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.!!!..

ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற தடை விதிக்கக் கோரி வழக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து பொறியாளர் தங்கவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

poes8_08-12-2008_15_49_58

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் வேதா நிலையம் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் பட்டியலின் கீழ் வருகிறதா? என்று கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அரசின் விளக்கத்தை கேட்டு பதிலளிக்க உத்தரவிட்டு, நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.!!!..

 கோரக்பூர் மருத்துவமனையில் மேலும்  24 குழந்தைகள் பலி 

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 10 மற்றும் 11-ந்தேதிகளில் மட்டும் சுமார் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

201709042251324085_24-more-children-die-in-past-48-hrs-at-BRD-medical-college_SECVPF (2)

இந்த சம்பவத்துக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் அதே மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில், மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.!!!.

தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில்  உச்சநீதிமன்றம் நோட்டீசு

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

voting_AP1

15 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு செப்.1-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் குறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.!!!.

அரசியல் பிரவேசத்தை டுவிட்டரிலேயே தொடங்கி விட்டேன்

நடிகர் கமலஹாசன் சொல்கிறார்

“எனது அரசியல் பிரவேசத்தை டுவிட்டரிலேயே தொடங்கி விட்டேன்” என்று, நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், வாக்குக்காக பணம் பெற்று திருடர்களை மக்கள் அனுமதித்துவிட்டதாக விமர்சித்தார்.

IN07_KAMAL_1261528f

தமிழகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும் என்று கூறிய கமல்ஹாசன், அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நம் கடமை என்றும் கூறினார். இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமலஹாசன், தனது அரசியல் பிரவேசத்தை டுவிட்டரில் தொடங்கி விட்டதாக கூறினார். “அரசியலை தொடங்கியது, தொடங்கியதுதான்., அதில் இனி மாற்றம் இல்லை” எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.!!!.

பெங்களூரில் பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை

பெங்களூருவில் லங்கேஷ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றி வந்தவர், கவுரி லங்கேஷ். இவர் வழக்கம் போல் பணியை முடித்து விட்டு, தனது வீட்டில் இருந்தார்.

Gauri_Lankesh_FB2

 

அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அவரது உடலில் 3 குண்டுகள் பாய்ந்து இருப்பது கண்டறியப்பட்டது. பத்திரிகையாளரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.!!!.

 
 
 
 

This post has been viewed 151 times