விண்ணை தொட்ட சாதனை.. 665 நாட்கள் விண்வெளியில் கழித்த 57 வயது பெக்கி விட்சன்…!

 

விண்ணை தொட்ட சாதனை.. 665 நாட்கள் விண்வெளியில் கழித்த 57 வயது பெக்கி விட்சன்…!

665 நாட்களை விண்வெளியில் கழித்து புதிய வரலாற்று சாதனையை புரிந்த பெக்கி விட்சன் செப். 1-ம் தேதி பூமிக்கு திரும்பினார்.

04-1504513539-us-spacewoman-peggy-whitson-records-the-break-by-staying-665-days-at-space-research

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயது பெண்மணி பெக்கி விட்சன் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.

பெக்கி உள்பட 3 விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பும் வீடியோக்களை “நாசா” தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கஜகஸ்தானில் தரையிறங்கிய சோயுஸ் விண்கலத்தில் இருந்து இறங்கிய பெக்கி விட்சனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

665 நாட்கள் சாதனை படைத்துள்ள விட்சன், விண்வெளி ஆய்வகத்துக்கு 2 தடவை கமாண்டர் ஆக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2002ம் ஆண்டு மற்றும் 2007- 2008 வரை என 3 முறை சுமார் 534 நாட்களை விண்வெளியில் செலவிட்டுள்ளார் விட்சன்.

உலக அளவில் அதிக நேரம் விண்வெளியில் செயல்பட்டவர்கள் பட்டியலில் பெக்கி விட்சன் 8-வது இடத்தை வகிக்கிறார். விட்சனுடன் வந்த ரஷ்ய விண்வெளி வீரர் ஃயோடர் யர்ச்சிகின் 673 நாட்கள் விண்வெளியில் செலவிட்டு ஏழாவது இடத்தில் உள்ளார். மேலும் விண்வெளி ஆய்வகம் சென்ற நாசா விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரே ஒரு பெண் விஞ்ஞானி என்ற பெருமையையும் பெக்கி விட்சன் பெற்றுள்ளார்.

உலகின் மிக வயதான விண்வெளிப் பெண் மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளியில் நடக்கும் பெண்மணி என்ற பெருமையையும் விட்சன் பெற்றுள்ளார். வேற்றுகிரகங்களுக்குச் சென்று விண்வெளி ஆய்வு நடத்துவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், தொடர்ந்து- இந்தப் பணியில் ஈடுபடப் போவதாகவும் கூறினார்..!!!.

ரோஹிங்யா இனப்படுகொலை: நெஞ்சை உறைய வைக்கும் புகைப்படம் வெளியானது

இதுவரை இல்லாத வகையில் மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலைய படுமோசமாக நடந்து வரும் நிலையில் இதுவரை சுமார் 90,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக மியான்மர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

1504548599-5284

ராணுவம் மற்றும் புத்த மதத்தினர் இணைந்து இந்த படுகொலையை நடத்தி வருவதாகவும், இதற்கு முன் உலகை உலுக்கிய கொசாவோ, ஈழ இனப்படுகொலைகளை விட பத்து மடங்கு கொடூரமான படுகொலை இது என்றும் கூறப்படுகிறது. ஜனநாயக ஆட்சியை மலரச் செய்த சூகி ஆதரவு பெற்ற ஆட்சியில் இப்படி ஒரு இனப்படுகொலையா? என உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மியான்மரை விட்டு முஸ்லிம்கள் வெளியேறும், மற்றும் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இவற்றில் ஒன்று ஒரு பச்சிளங்குழந்தை சகதியில் குப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சி, கல்நெஞ்சையும் உறைய வைத்துள்ளது.
இந்த நிலையில் ரோஹிங்யோ இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா. உத்தரவிட்டுள்ளது என்பது மட்டுமே இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி ஆகும்.!!!.

அமெரிக்காவில் கணவர், மாமனார், மாமியாரால் தாக்கப்பட்ட இந்தியப்பெண் மீட்பு

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், ஹில்ஸ்பாரோ கவுண்டியில் தனது கணவர் தேவ்விர் கல்சி மற்றும் ஒரு வயது மகளுடன் வசித்து வந்தவர் இந்தியப் பெண் சில்கி கெயின்ட் (வயது 33).இந்தியாவில் இருந்து சில்கியின் கணவர் தேவ்விர், கல்சியின் பெற்றோர் ஜஸ்பிர், பூபிந்தர் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் மருமகள் சில்கியை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

World 3

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, சில்கிக்கும், அவரது கணவர் தேவ்விர், கல்சிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமனார், மாமியார் தலையிட்டு, சில்கியை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அந்தப் பெண்ணுக்கு முகம், கழுத்து என பல உறுப்புகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் சில்கியின் ஒரு வயது குழந்தைக்கும் தவறுதலாக முகத்தில் அடி விழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் சில்கியை மாமனார் கத்தியைக் காட்டி மிரட்டியும் உள்ளார். வீட்டுக்குள் போட்டு பூட்டியும் உள்ளனர். இனியும் பொறுத்துப்பார்க்க முடியாது என்ற நிலையில் சில்கி, இதுபற்றி இந்தியாவில் உள்ள தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர்கள் உடனே ஹில்ஸ்பாரோ கவுண்டி ஷெரீப் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஷெரீப் அலுவலக அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்றனர்.

கதவைத்தட்டியும் திறக்காத நிலையில், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அங்கே படுகாயம் அடைந்த நிலையில் காணப்பட்ட சில்கியையும், அவரது குழந்தையையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, சில்கியின் கணவர், மாமனார், மாமியாரை கைது செய்தனர். அவர்கள் மூவரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன!!!.

 
 
 
 

This post has been viewed 141 times