சினிமா செய்திகள்

 

சினிமா செய்திகள்

சூர்யா திரைபயணத்தில் புதிய மைல்கல்!

தற்போது,” தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் பிஸியாக சூர்யா நடித்துவருகிறார். சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். காரணம் என்ன தெரியுமா?

DFoMmKeVYAEbtJ_-e1501042199799

சூர்யா திரையுலகில் காலடி எடுத்து வைத்து 20 வருடங்கள் ஆகிறது. அவரின் முதல் படம்,”நேருக்கு நேர்”இந்த படம் 1997 செப்டம்பர் 6-ம் தேதி வெளியானது. “ தானா சேர்ந்த கூட்டம்” பற்றி ஏதாவது புதிய அறிவிப்பு விரைவில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, அது முடிந்தவுடன் டீஸர், ட்ரைலர் தேதிகள் பற்றி அறிவிக்கப்படும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அறிவித்தது நினைவிருக்கலாம்..

“ விவேகம் ”: இத்தனை  கோடி நஷ்டமா?

“விவேகம்” படம் உலகம் முழுவதும் ரிலிஸாகி இரண்டு வாரம் கடந்துவிட்டது. இப்படம் ரூ. 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால், அஜித்திற்கும் கேரளாவிற்கு எப்போதுமே செட் ஆகாது போல, அஜித்தின் அதிகபட்ச வசூல் கேரளாவில் ரூ 6 கோடி தான்.

vivegam-surviva-song-teaser-released-2

இதை விவேகம் முறியடிக்கும் என எதிர்ப்பார்த்தனராம், ஆனால், படம் அங்கு ரூ 4.75 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.இதனால், ஷேர் போக சுமார் ரூ. 2 கோடி வரை கேரளாவில் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது..

விஜய் என்னிடம் மன்னிப்பு கேட்டார்., நெகிழ்ச்சி சம்பவத்தை கூறிய வளரும் நடிகர்

விஜய் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கதெரிந்தவர். இவர் சிறிய நடிகர், பெரிய நடிகர் என்ற பாகுபாடே பார்க்க மாட்டார்.

54523545

அப்படித்தான் “தெறி” படத்தில் ஒரு சிறிய ரோலில் நடிக்க ஜிகர்தண்டா, சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சௌந்தர் ராஜனை அட்லீ அழைத்துள்ளார். அவரும் உடனே ஓகே சொல்லி நடிக்க செல்ல, அங்கு விஜய் ஒரு சில நாட்கள் ஷுட்டிங் பரபரப்பில் சௌந்தரிடம் பேசவில்லையாம்.

ஒருநாள் சௌந்தரே நேராக விஜய்யிடம் போய் தன்னை அறிமுகப்படுத்த ‘சாரி சௌந்தர், ஷுட்டிங் பரபரப்பில் கவனிக்கவில்லை, சாரி’ என்று விஜய் கூறினாராம்.

இதை கேட்டு ஒரு நிமிடம் சௌந்தர் ராஜனுக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக இருந்ததாம், சூப்பர் ஸ்டார் இடத்தில் இருக்கும் விஜய் இப்படி நடந்துக்கொண்டது தன்னால் எப்போதும் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்..

சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் போட்டிக்கு இத்தனை படங்களா?

முக்கிய நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களை டார்கெட் செய்து வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் இந்த மாதம் 29 ம் தேதி நயன்தாரா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள “வேலைக்காரன்” ரிலீஸ் ஆவது அனைவரும் அறிந்ததே.

Velaikaran Lyrics

ஆயுதபூஜையை முன்னிட்டு அந்நாளில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள “அறம்” படமும் வெளிவருகிறது. இதில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் ஏற்கனவே சேர்ந்து விட்டது.

கௌதம் கார்த்திக் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாவதாக சொல்லப்பட்டிருந்த ஹர ஹர மகாதேவகி படம், ஆயுதபூஜைக்கு தான் வருகிறதாம். இதோடு விஜய் சேதுபதி நடித்துள்ள “கருப்பன்”, ஜீவி பிரகாஷின் “ செம” ஆகிய படங்களும் அதே நாளை கார்னர் செய்து வெளிவருவதாக சொல்லப்படுகிறது..

 
 
 
 

This post has been viewed 198 times