வாழ்வின் அந்தரங்கம்

 

வாழ்வின் அந்தரங்கம்

* டாக்டரம்மா! எனது கணவர் சமீப காலமாக “பான் பராக் “ புகையிலையை வாயில் போட்டு மென்று தின்னும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார். அவரை இந்த பழக்கத்தில் இருந்து மீட்டு எடுப்பது எப்படி?

drug-addiction-story

* மூளை செயல்திறனை பான்பராக் முற்றிலும் பாதித்து விடும். அவருக்கு எந்த செயலிலும் ஈடுபாடு இருக்காது. எனவே உங்கள் கணவரை உடனடியாக, மன நல மருத்துவரிடம் அழைத்துச்சென்று, இப்பழக்கத்தில் இருந்து மீள உடனடியாக முயற்சி செய்யுங்கள்.!!!.

* எனக்கு 18 வயதான போதே, எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். எனக்கு 23 வயதுக்குள் மூன்று குழந்தைகள் பிறந்து விட்டனர். இப்போது எனது கணவர் இறந்து விட்டார். நான் மறு மணம் செய்யலாமா?

27421988_l-e1467901722386

* உங்கள் குழந்தைகளின் வளர்ப்பு, கல்வி போன்றவற்றை யோசித்து மறுமணம் செய்யலாம். ஆனால், உங்கள் 2-வது கணவர் மூலமாகவும் குழந்தைகள் பிறந்தால், முந்திய 3 குழந்தைகளையும் பாதுகாப்பதிலும், படிக்க வைப்பதிலும் சிரமங்கள் ஏற்படலாம். இது பற்றியெல்லாம் உங்கள் 2-வது கணவரிடம் பேசி ,யோசித்து முடிவு செய்யுங்கள்…!!!.

* எனது மனைவி, அவளது பெற்றோருக்கு ஒரே மகள். எங்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. எங்கள் குடும்பத்தை விட, எனது மனைவி குடும்பம் வசதியானவர்கள். இதனால் என் பேச்சை, என் மனைவி கேட்பது இல்லை. அவளை எப்படி திருத்துவது என்பதும் தெரிய வில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

Husband-wife-problem-solution

* கணவன்- மனைவி என்ற நிலைக்கு வந்து விட்டால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வந்து விட வேண்டும். யார் பணக்காரர் என்ற கேள்வி எல்லாம் எழக்கூடாது. உங்கள் மனைவியிடம் பக்குவமாக எடுத்து பேசி, அவருக்கு புரிய வையுங்கள். இருமனமும் ஒன்று பட்டால்தான் இல்லறம் இனிக்கும்..!!!.

* உலகம் முழுவதும் பரவியுள்ள “புளு வேல்” இணைய தள விளையாட்டில் ஏராளமான மாணவ-மாணவிகள் உயிர் இழந்து விடுகிறார்களே!! மாணவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

maxresdefault

* காந்தியடிகளின் 3 அறிவுரைகளை மறந்து விடாதீர்கள். தீயவற்றை கேட்க வேண்டாம். தீயவற்றை பார்க்க வேண்டாம். தீயவற்றை பேச வேண்டும். இதன்படி மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயம் நடந்து கொள்ள வேண்டும்.!!!.

 
 
 
 

This post has been viewed 79 times