கேரட் மில்க் ஷேக்

 

கேரட் மில்க் ஷேக்

தேவையானவை:
கேரட் – 2
பால் – ஒரு டம்ளர்
தேன் -ஒன்றரை மேசைக்கரண்டி
வெனிலா ஐஸ்கிரீம் – 2 மேசைக்கரண்டி
பாதாம் – 4
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
ஐஸ் கட்டிகள் – 2

செய்முறை:

கேரட்டைத் துருவிக்கொள்ளவும். பாதாமை தோல் நீக்கி சில மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிது கேரட் துருவலையும், பாதாமையும் அலங்கரிப்பதற்காக தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் துருவிய கேரட் துருவலுடன், தோல் நீக்கிய பாதாம், சிறிது பால் சேர்த்து அரைக்கவும்.

carrot-milkshake-18-1450438239

அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் மீதமுள்ள பால், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், தேன் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பரிமாற போகும் கப்பில் மில்க் ஷேக்கினை ஊற்றி, அதன் மேல் தனியாக எடுத்து வைத்துள்ள கேரட் துருவல் மற்றும் பாதாமை தூவி அதனுடன் குங்குமப்பூவும் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

 
 
 
 

This post has been viewed 316 times