மின்மினிச் செய்திகள்

 

மின்மினிச் செய்திகள்

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை கீரை

நமது கிராமங்களிலும், வீடுகளிலும், முருங்கை மரங்களை பார்க்கலாம்.இதில் கிடைக்கும் இலை, காய், பூ போன்ற அனைத்துமே நமது உடலக்கு நல்லது.

ht1614

 

இவை, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே, இதனை வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.!!!.

உடலுக்கு வலு சேர்க்கும் தினை

அதிகம் மழை இல்லாத வானம் பார்த்த பூமியில் விளையும் பயிர்களில் தினையும் ஒன்று. இது கேழ்வரகு போன்று, சத்தானது. தினையை மாவாக்கி, அதனை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

img_0180

தினையின் மாவில் கொழுக்கட்டை போன்ற பலகாரங்களும் செய்யலாம். தினையை மாவாக்கி அதனை தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து, கூழாகவும் சாப்பிடலாம். எந்த வகையில் சாப்பிட்டாலும் அது, நமது உடலுக்கு நல்லது.!!!.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

*தினமும் உணவில் சின்ன வெங்காயத்தை பச்சையாக பயன் படுத்த வேண்டும். வேக வைத்த பூண்டும் சேர்த்துக்கொள்ளலாம்.
*ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் கிரீன் டீ சாப்பிடுவது நல்லது. அது, மாரடைப்பை கட்டுப்படுத்தும்.

57b3ffa75647e1de71633937be4fd4b527213ef054aef9e9cb339982151e5bcb
*மதியம் சாப்பிடும் போது சாதத்தில் கறிவேப்பிலை பொடி, வெந்தய பொடியை போட்டு சாப்பிட வேண்டும்.
*உணவில் வாழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், முருங்கை கீரை போன்றவைகளை பயன்படுத்தலாம்..!!!.

உடல் எடையை குறைக்கும்
விளாம்பழத்தின் மகிமை

விளாம் மரத்தை பொதுவாக கோவில்களிலும், கிராமங்களிலும் பார்க்கலாம். இவற்றின் பழம் மருத்துவ குணம் கொண்டது. இதில் வைட்டமின் சி, இரும்பு சத்து, கால்சியம் அதிகம் உள்ளது.

vilampazham1

இந்த பழத்தின் சதைப்பகுதியை எடுத்து, அத்துடன் நாட்டு சர்க்கரையை சேர்த்து வாணலியில் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி , கொதிக்க வைத்த இறக்கும் பதம் வந்ததும், அதனை இறக்கி ஆற வைத்து சாப்பிட்டால், உடலுக்குநல்லது. குடல் புண்ணை ஆற்றும் தன்மையை கொண்டது. நன்கு பசி எடுக்கும்.!!!.

 
 
 
 

This post has been viewed 159 times