போலீஸ் கிரைம்

 

போலீஸ் கிரைம்

தன்னை கொடுமை படுத்திய காட்சிகளை வீடியோவாக
பதிவு செய்து விட்டு, பெண் தற்கொலை

சென்னை மணலி அண்ணா தெருவில் வசிக்கும் டார்வின் ராஜா என்பவர் வியாசர்பாடியை சேர்ந்த தேவி என்ற பெண்ணை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்த முடிவை எடுக்கும் முன், மாமனார், மாமியார், கணவன் மூன்று பேரும் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்திய கொடுமை குறித்து 9 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

Husband and Wife

 

அந்த கடிதம் வைத்திருந்த இடத்தை தனது உடலில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார். மேலும் தனது செல்போனில் தான் பட்ட கொடுமைகள் குறித்து உருக்கமாக பேசி, அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். அதில் தனது கணவனுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.!!!.

டிராக்டர் வாங்கிய கடனை திருப்பி
செலுத்த முடியாத விவசாயி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன், வங்கிகடன் பெற்று டிராக்டர் வாங்கினார். ஆனால், தவணை செலுத்த முடியாத நிலையில், தனியார் வங்கி., அவருடயை டிராக்டரை ஜப்தி செய்து விட்டது.

tractor

 

இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொண்டார். இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் அணைத்துக்கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவரது கடனை ரத்து செய்வதாகவும், அவரது குடும்பத்தினரிடம் ஜப்தி செய்யப்பட்ட டிராக்டரையும் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் தனியார் வங்கி அறிவித்தது. இதனைத் தொடரந்து, ஜப்தி செய்த டிராக்டரை, விவசாயி குடும்பத்தாரிடம் வங்கி அதிகாரிகள் ஒப்படைத்தனர்.!!!.

 
 
 
 

This post has been viewed 100 times