சத்தியம் பதில்கள்

 

சத்தியம் பதில்கள்

( கிறிஸ்டி, சென்னை):
நீட் தேர்வுக்கு முதல் பலியான மாணவி அனிதாவின் ஆவி சாந்தம் அடையுமா?

கடினம்தான். மீண்டும் பிறந்து டாக்டராகலாம். அப்போதுதான் அவரது ஆசை நிறைவேறும்.!!!.

( சுரேஷ், மதுரை):
தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வரும் என்று, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

தமிழகத்திற்கு இடைத்தேர்தல் வராமல் இருக்கவே, அரசியல் கட்சித்தலைவர்களுடன், பாஜக தலைவர்கள் திரைமறைவு பேச்சுக்களை பேசி வருகின்றனர். இந்த பேச்சு வார்த்தை வெற்றி பெறும் என்றே கருதப்படுகிறது. !!!.

( ரமேஷ், குடியாத்தம்):
ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா? எப்போது வருவார்?

வருவார்….. வருவார்…. என்றே காலத்தை கடத்தி விட்டார். இனி தேர்தல் நடந்தால் எதிர்பார்க்கலாம்…!!!.

( தமிழ்ச்செல்வி, செங்கல்பட்டு):

இப்போது தேர்தல் நடந்தால், திமுக ஆட்சிக்கு வந்து விடும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிர மணிய சுவாமி பேசியுள்ளாரே.

அவர், பாரதீய ஜனதா தலைவர் என்பதை மறந்து, தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் உள்ளதை, உள்ளதென்று கூறியுள்ளார்..!!!.

(பங்காரு, ஸ்ரீவில்லிபுத்தூர்):
2019 மக்களவை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், 19 எதிர்க்கட்சிகளும் சேர்ந்தால், தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

இப்போதும் கூட, அரசுக்கு எதிரான கருத்துக்கள் பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் கூட்டும் கூட்டங்களில் 19 கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். ஆனால், தேர்தல் வரை இதே ஒற்றுமை நீடிக்க வேண்டுமே.!!!.

( தங்க சுமத்திரை, செங்கம்)
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி அரசை கவிழ்த்து விடுவார்களா?

இது ஒரு மிரட்டல்தான். இந்த மிரட்டலை வைத்து, காரியங்களை சாதிக்கவே, தினகரன் திட்டமிட்டு வருகிறார்..!!!.

( தமிழ்க்கொடி, மதுரை):
சசிகலாவின் காலில் விழுந்த ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும், இப்போது சசிகலா வெளியே இருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள்?

சாமிக்கு ஏற்ற பூசாரிகளாக மாறி இருப்பார்கள். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை., பகைவனும் இல்லை.!!!!!.

( தாமோதரன், சென்னை):
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டதால், வேலை இல்லாத டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாமே?

நல்ல காரியம் தான். ஆனால், டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்கள் மீதுள்ள மதுவின் வாசனையை முழுமையாக உதறித்தள்ளி விடவேண்டும். பழைய தொழிலை மறைமுகமாக செய்யக்கூடாது.!!!.

 
 
 
 

This post has been viewed 94 times