கருத்துக்கணிப்பில் தி.மு.க-வுக்கு முன்னிலை… அ.தி.மு.க-வுக்கு பின்னிலை…3

 

கருத்துக்கணிப்பில் தி.மு.க-வுக்கு முன்னிலை…
அ.தி.மு.க-வுக்கு பின்னிலை…3

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகம்” என்ற அமைப்பு, தமிழகம் முழுவதும் ஆக.28 முதல் செப்.7-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தினார்கள். அந்த கருத்துக்கணிப்பின் படி பார்த்தால், தற்போது தமிழகத்தில் தி.மு.க.வுக்கு முன்னிலையும், அ.தி.மு.க.வுக்கு பின்னடைவும் இருப்பது தெரிய வருகிறது.

13TH_KARUNANIDHI_1_3187465f

“தமிழ் நாட்டில் இப்போது தேர்தல் வந்தால், எந்த கட்சி அல்லது கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும்?” என்ற கேள்விக்கு “தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும்” என்று 67 சதவீத மக்கள் பதில் அளித்துள்ளனர்.”அதிமுக அணிகள் தலைமையில் ஆட்சி அமையும்” என்று, 15.4 சதவீத மக்கள் பதில் அளித்துள்ளனர்.

Stalin11-k12C--621x414@LiveMint

“தற்போதைய அரசியல் சூழ்நிலையில், தமிழக முதல்வராக யார் வர வேண்டும்?” என்ற கேள்விக்கு, ஸ்டாலினுக்கு 41 சதவீதம்., ரஜினி காந்த்துக்கு 21 சதவீதம்., கமல்ஹாசனுக்கு 13 சதவீதம், தினகரனுக்கு 10 சதவீதம், அன்பு மணிக்கு 7 சதவீதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“அதிமுக அரசின் நம்பக தன்மையும், அணுகு முறையும் உங்களுக்கு பிடித்துள்ளதா? “என்று கேட்டதற்கு, “அதிமுக அரசு மீது வெறுப்பு ஏற்படுகிறது” என்று 61 சதவீத மக்களும், “நம்பக தன்மை ஏற்பட வில்லை” என்று 33 சதவீதம் பேரும் கூறியுள்ளனர். “யாருக்கு வாக்களிப்பீர்கள்?” என்று கேட்டதற்கு, திமுக-வுக்கு 54 சதவீதம் பேரும், அதிமுக அணிகளுக்கு 18 சதவீதம் பேரும், பாரதீய ஜனதாவுக்கு 3 சதவீதம் பேரும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 2 சதவீதம் பேரும், தேமுதிக-வுக்கு ஒரு சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

“தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அணுகுமுறை தொடரலாமா?” என்ற கேள்விக்கு “தொடரக்கூடாது” என்று 87 சதவீதம் பேரும், “தொடரலாம்” என்று 1 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

“தமிழ் நாட்டில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தொடர வேண்டுமா? இந்த ஆட்சியை கலைத்து விட்டு, மறு தேர்தல் நடத்தலாமா?” என்ற கேள்விக்கு, “உடனே ஆட்சியை கலைக்க வேண்டும்” என்று 68.2 சதவீத பேரும், “மறுதேர்தல் நடத்த வேண்டும்“ என்று 30.5 சதவீதம் பேரும், “இந்த ஆட்சி தொடர வேண்டும்” என்று 0.5 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

“ரஜினி காந்த் புதிய கட்சி ஆரம்பித்தால், அல்லது வேறு கட்சியில் இணைந்தால், அவரால் சாதிக்க முடியுமா?” என்ற கேள்விக்கு, “வெற்றி பெறுவார்” என்று 13 சதவீதம் பேரும், “வாய்ப்பு குறைவு” என்று 75 சதவீதம் பேரும், பதில் அளித்துள்ளனர். “நடிகர் கமல ஹாசன் புதிய கட்சி ஆரம்பித்தால், அரசியலில்சாதிக்க வாய்ப்பு உள்ளதா?” என்ற கேள்விக்கு “வெற்றி பெறுவார்” என்று 29 சதவீதம் பேரும், “வாய்ப்பு குறைவு” என்று 61 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

“நடிகர் கமலஹாசன் அரசியல் கருத்துக்களை வெளியிடும் நோக்கம் என்ன?” அதிமுக-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க” என்று 45 சதவீதம் பேரும், “அரசியல் ஆர்வம்”என்று 20 சதவீதம் பேரும், “அரசியல் வெறுப்பு” என்று 28 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.

“தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவரின் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, “ஆதரவு” தெரிவித்து 72 சதவீதம் பேரும், “எதிர்ப்பு” தெரிவித்து 19 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். “தற்போதைய தமிழக அரசு தனது எஞ்சிய காலத்தை பூர்த்தி செய்யுமா?” வாய்ப்பு உள்ளது” என்று 11 சதவீதம் பேரும், “வாய்ப்பில்லை” என்று 82 சதவீதம் பேரும், பதில் அளித்துள்ளனர்.

“இரு அணிகளும் இணைந்து விட்டாலும், அதிமுக-வை எதிர்காலத்தில் வழி நடத்திச்செல்லும் வாய்ப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ளதா?’ என்ற கேள்விக்கு, “வாய்ப்பு இல்லை” என்று 80 சதவீதம் பேரும், பதில் அளித்துள்ளனர். மற்றொரு கேள்விக்கு, “தீபாவின் செயல்பாடுகள், அதிமுக தொண்டர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை” என்பதும், மக்கள் கருத்து மேடையில் தெரியவந்துள்ளது. 2-ஜி வழக்கின் தீர்ப்பு, திமுக-வுக்கு எதிராக வந்தால், இந்த தீர்ப்பு, திமுக-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் வெளிப்பட்டுள்ளது…!!!.

 
 
 

1 Comment

  1. தமிழ் says:

    ஏன் சீமானை எல்லா ஊடகங்களிலும் மறைக்கிறது, நான் ஒரு சாமானியன் எனக்கு சீமான் தத்துவம், கொள்கைகள் விட வேற எந்த கட்சிக்கும் தகுதி என்பதை உணர்கிறேன் . எல்லா ஊடகங்களிலும் சீமான் மறைக்கப்படுவதில் பின்னால் அரசியல் சூழ்ச்சி உள்ளது. நடக்கட்டும் இந்த ஜென்மத்தில் எவனையூம் வாழ விட போவதில்லை

 

This post has been viewed 1,639 times