துளிர் செய்திகள்

 

துளிர் செய்திகள்

“நீட்” தேர்விலிருந்து விலக்கு கோரி
ஸ்டாலின் தலைமையில்ஆர்பாட்டம்….

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் பங்கேற்பு …….

“நீட்” தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி, திமுக சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை திமுக-வுடன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து நடத்தின.

neet7

 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இதேபோல் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.!!!..

“ நடிகர் கமல்ஹாசன் ஒரு முட்டாள்”-சுப்பிர மணிய சுவாமி கருத்து

“நடிகர் கமல்ஹாசன் ஒரு முட்டாள்” என்று ட்விட்டரில் பதிவிட்ட பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். சமீபத்தில் கேரள முதலமைச்சரை நடிகர் கமல் சந்தித்திருந்தார்.

kamal-hassan-14-1473871077

இது குறித்து சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,”கமல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரப்போவதாகத் தெரிகிறது. அவர் ஒரு முட்டாள்., தப்போது முட்டாள்களின் இயக்கத்தில் அவர் இணையப் போகிறார்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.!!!..

எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சொத்துக்களின் மதிப்பு அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு உயர்சொத்துகள் அதிகரித்துள்ளது தொடர்பாக 7 எம்.பி.க்கள் மற்றும் 98 எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய பட்டியலை உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்தது.

மக்களவை உறுப்பினர்கள் 26 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 257 பேரின் சொத்துகள் கணிசமாக உயர்ந்து இருப்பது, வேட்புமனு தாக்கல் படிவத்தின் மூலம் தெரியவந்துள்ளதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான “லோக் ப்ரஹாரி”குற்றம் சாட்டி இருந்தது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களாக ஆன பிறகு சொத்துக்கள் சேர்த்தவர்களின் பட்டியலை, வருமான வரித்துறை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இது தொடர்பான பூர்வாங்கப் பணிகளை தொடங்கி உள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.!!!.

பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திய பெண்ஆட்சியர்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் வகுப்பெடுத்தார். சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, மல்லியகரை உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் அரசின் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ஆய்வு மேற்கொண்டார்.

hqdefault

 

கருத்த ராஜாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆட்சியர் ரோஹிணி ஆய்வு நடத்திய போது ,அங்குள்ள பள்ளிக்கூடத்துக்கு, போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் வகுப்பிற்கு வராதது தெரியவந்தது. இதனை அறிந்த ஆட்சியர் ரோஹிணி, அந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று, மாணவர்களை வகுப்பில் அமரச் செய்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாடங்களை எடுத்து நடத்தினார்.!!!.

“நான் திமுக கூட்டணியில் சேரவில்லை”-வைகோ

“நான் திமுகவுடன் கூட்டணி சேரவில்லை” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலம் என்றும் அதே போன்று இயற்கை வளங்களுக்கும், சோதனையான காலம் என்று கூறினார்.

vaiko_new

 

கல்வித்துறையை காவிமயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக கூறிய வைகோ, நீட் எதிர்ப்பு போராட்டத்தை காவல்துறையை வைத்து தடுத்தால் அதன் எதிர்விளைவுகளை தமிழக அரசு சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார். தான் திமுகவுடன் கூட்டணி சேரவில்லை என்றும், முரசொலி பவளவிழாவில் துரைமுருகன் தன்னை குறிப்பிட்டு பேசவில்லை என்று தெரிவித்தார்.!!!.

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக்கோரி வழக்கு

தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

CwaibEcUkAA-kMP

இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். இதையடுத்து ஆர்.கே.நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்பில், வாக்காளர்களுக்கு பணமும், பரிசு பொருட்களும் வாரி வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்தது.

இந்நிலையில் 6 மாதங்களுக்கு மேலாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..!!!.

 
 
 
 

This post has been viewed 111 times