பலரின் கனவில் தோன்றிய மர்ம மனிதன்!

 

பலரின் கனவில் தோன்றிய மர்ம மனிதன்!

கடந்த 2006-ம் ஆண்டு ஒரு பிரபலமான உளவியலாளர், தன்னுடைய கனவில் அடிக்கடி தென்பட்டு வரும் ஒரு முகத்தை ஓவியமாக வரைந்து தன்னுடைய மேஜை மீது வைத்திருந்தார். அந்த சமயத்தில் அவரை பார்க்க வந்த நோயாளி ஒருவர், அந்த ஓவியத்தை பார்த்து விட்டு, அந்த முகத்தை தன்னுடைய கனவிலும் பார்த்து இருப்தாக அந்த உலவியலாரரிடம் கூறியுள்ளார்.

1-290-670x372

இதனை கேட்டு ஆச்சரியம் அடைந்த அந்த உலவியலார், தனக்கு தெரிந்தவர்களிடமும், தன்னுடன் பணி புரிபவர்களிடமும் இந்த படத்தை கொடுத்து உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக இது பரவ ஆரம்பித்து, சில மாத கால இடைவேளையிலேயே சுமார் 200 பேர் இந்த படத்தில் இருந்த மனிதனை, தன்னுடைய கனவிலும் பார்த்திருப்பதாகவும், ஆனால் இந்த மனிதனை தங்கள் வாழ்நாளில் நேரில் ஒரு தடவை கூட பார்த்தது இல்லை என்ற ஆச்சரியமான விஷயத்தை தெரிவித்துள்ளார்கள்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த முகத்தை பார்த்ததாக கூறிய 2000 பேரும் அமெரிக்காவில் மட்டும் இல்லாமல், உலகம் பூராகவும் இந்த முகத்தை பலர் பார்த்ததாக கூறியுள்ளனர். 2009 -ம் ஆண்டு இந்த உருவத்தை முன் நிறுத்தி This Man.Org  என்ற ஒரு வளைதளத்தை அன்றியா நேட்டர்லாந் என்பவர் உருவாக்கி உள்ளார். இவரும் இந்த உருவத்தை தன்னுடைய கனவில் பார்த்ததாகவும், இது யார்? என்று தெரிந்து கொள்ளும் விதமாக இந்த வலைதளத்தை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.

பலரின் கனவில் தென்படும் இந்த நபரை முன் வைத்து ஒரு ஆச்சரியமான விளக்கமும் கொடுக்கப் படுகிறது.
நாம் அடிக்கடி பார்க்கும் பல மனிதர்களின் முகத்துக்கு ஒத்து போறதாகவும், உதாரணமாக அந்த முகத்தின் ஒரு பகுதியை மறைத்துக்கொண்டு பார்க்கும்போது, வயதானவர் போன்ற தோற்றத்தையும், மற்றொரு பகுதியை மறைத்துக்கொண்டு பார்க்கும்போது, இளமையானவர் போன்ற தோற்றத்தையும் கொடுக்கின்றது போன்ற பல தகவல்களையும் முன் வைக்கின்றனர்.

இந்த மர்ம நபர் உண்மையில் இருக்கின்றாரா? இல்லையா? என்று யாருக்கும் தெரியாது..!!!.

பேஸ்புக் மூலம் 13 ஆண்களை திருமணம் செய்த பெண் ! எதற்குத் தெரியுமா?

பெண்ணொருவர் “பேஸ்புக்” மூலம் தொடர்பை ஏற்படுத்தி 13 ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடம் வரதட்சணை மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தாய்லாந்தில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை தந்திரமாக வசூலித்த பின்னர், அந்த பெண் நைசாக நழுவி விடுகிறார்.

thailand

32 வயதான ஜரியாபார்ன் புயாயய் என்பவர் தாய்லாந்தின் நங் ஹாய் மாகாணத்தில் வசித்து வந்துள்ளார். மிகவும் அழகான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்த நிலையில் இவர் பணம் சம்பாதிக்க புதிய முறையை கையாண்டார். தாய்லாந்து பாரம்பரியபடி திருமணம் செய்யும் பெண்ணுக்கு, ஆண் வரதட்சணை பணம் வழங்க வேண்டும்.

0809_Daily_Story_1

எனவே, பணம் சம்பாதிக்க ஜரியாபார்ன் பல ஆண்களை திருமணம் செய்து வரதட்சணை பணத்தை மோசடி செய்ய திட்டம் தீட்டினாள். இதற்காக அழள் 13 ஆண்களை தொடர்ந்து திருமணம் செய்தாள். ஒரே மாதத்தில் மட்டும் அவள் 4 ஆண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடம் இருந்து வரதட்சணையாக ரூ.4 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம்வரை வசூலித்தாள்.

பணம் மட்டுமின்றி கார் போன்றவற்றையும் வரதட்சணையாகப் பெற்றாள். பின்னர் ஏதாவது ஒரு காரணம் கூறி அவர்களுடன் சேர்ந்து வாழாமல் விவாகரத்துப் பெற்றாள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில், போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்..!!!.

பேஸ்புக் மூலம் உதவி கேட்ட கற்பழிக்கப்பட்ட இளம்பெண்

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, கொலை செய்ய முயன்ற ஒருவனிடம் இருந்து தப்பி, “பேஸ்புக்” மூலம் உதவி கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3a1854cbe797c3f06b56b465c635c331

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இங்கிலாந்து பெண் ஒருவர் தங்கியிருந்தார். அவருடன் தங்கியிருந்த மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரை கொலை செய்ய கத்தியால் கையில் குத்தியுள்ளார்.

இந்த நிலையில் கொலைகாரனிடம் இருந்த தப்பிய அந்த பெண், ஒரு அறைக்கு சென்று உள்ளே பூட்டிய பின்னர் பேஸ்புக்கில் தனது காயங்களுடன் கூடிய படத்தை பதிவு செய்து உதவி கேட்டார். அவருக்கு அவசர உதவி எண், போலீஸ் எண் ஆகியவை தெரியாததால், அவர் பேஸ்புக்கின் உதவியை நாடியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த அவரது நண்பர்கள், ஆஸ்திரேலிய போலீசின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், உடனடி நடவடிக்கை எடுத்த போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.அந்த பெண்ணையும் மீட்டுள்ளனர்.!!!.

 
 
 
 

This post has been viewed 148 times