சினிமா செய்திகள்

 

‘சூப்பர் டிலக்ஸ்’ – விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிக்கும் புதிய படம்

குமார ராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வந்த படத்திற்கு முதலில் “அநீதிக் கதைகள்” என பெயரிட்டிருந்தாக கூறப்பட்டது. அது தற்போது “சூப்பர் டிலக்ஸ்” என மாற்றப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் பெண் வேடத்தின் பெயர் “ஷில்பா” எனவும் படக்குழு கூறியுள்ளது.

625.0.560.320.100.600.053.800.720.160.90 (2)

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில், மேலும் நதியா, மிஸ்கின், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..

தமிழ்கன் இணையதள அட்மின் கைது: போலீஸ் நடவடிக்கை

தமிழ் படங்களை தியேட்டரில் திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுவந்த “தமிழ்கன்” என்ற இணையத்தளத்தின் உரிமையாளர் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

3bwo50VB
முதலில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் பரவியது. ஆனால் பின்னர் அது தமிழ்கன் அட்மின் என விளக்கம் அளித்துள்ளனர். அவரது பெயர் கௌரிஷங்கர் எனவும், இவர் திருப்பத்தூரை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

திருட்டு டி.வி.டி-க்காக எதிராக பெறப்பட்ட முதல் வெற்றி என சினிமாதுறையில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்..

உலக சாதனையை நோக்கி விவேகம் – ரசிகர்கள் ரெடியா?

“விவேகம்” படம் திரைக்கு வந்த 3 வாரங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் எப்படியும் அடுத்த வாரம் புதுப்படங்கள் களம் இறங்குவதால், “விவேகம்” இந்த வாரத்துடன் பல திரையரங்குகளில் எடுத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith_16187
இந்நிலையில் விவேகம் படத்தின் டீசர் 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது, இதுமட்டுமின்றி 554ரி பேர் இதை லைக் செய்துள்ளனர். இன்னும் 17 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்தால், உலகிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசராக விவேகம் டீசர் ஒரு புது சாதனையை படைக்கும்..

வீட்டிற்கு வந்த விஜய் என்ன பேசினார்?

“மருத்துவர் ஆக வேண்டும்” என்ற ஆசை நிறைவேறாமல் உயிர் நீத்த அனிதாவின் இழப்பை, இப்போதும் பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பல பிரபலங்கள் அனிதாவுக்காக பேச, இளையதளபதி விஜய் அண்மையில் அனிதாவின் வீட்டிற்கே சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற விஜய் என்ன பேசினார்? என்பதை அனிதாவின் அண்ணன் மணிரத்னம் கூறியுள்ளார்.

maxresdefault (1)

மணி ரத்னம் பேசும்போது, “அனிதாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த எண்ணியிருந்தேன். நான்(விஜய்) வந்தால் சூழ்நிலை சரியாக இருக்காது என்று வரவில்லை. எனக்கும் வித்யா என்று ஒரு தங்கை இருந்தாள், அவள் இறந்துவிட்டாள், அவள் இறப்பு எங்களை வெகுவாகப் பாதித்தது. அதனால், இப்போது தங்கையை இழந்த உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? என்பதை நான் நன்றாக உணரமுடிகிறது.

அனிதாவும் என் தங்கை தான், என்ன உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணுங்க, நான் செய்கிறேன், என்னிடம் கேட்க தயங்காதீர்கள் என்று கூறி, ஒரு போன் நம்பரை கொடுத்து பணத்தை என் தந்தையிடம் கொடுத்தார். அதோடு எவ்வளவு பணம் கொடுத்தேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டதாக, அனிதாவின் அண்ணன் கூறியுள்ளார்..

ஜிமிக்கி கம்மல் ஷெர்லினுக்கு நிஜமாக பிடித்தது,இந்த நடிகர் தானாம்

ஜிமிக்கி கம்மல் என்று சொன்னால், இப்போது ஒரே ஒரு பாடல் மட்டும் தான் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். அந்த பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், ஷெர்லின். இவரை தற்போது பலரும் பேட்டி எடுத்து வருகின்றனர்.

hq720

அப்படி ஷெர்லின் அண்மையில் கொடுத்த பேட்டியில் தனக்கு தல அஜித் தான் மிகவும் பிடித்த நடிகர் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு முன் அவருக்கு சூர்யா தான் மிகவும் பிடித்த நடிகர் என்ற ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது, குறிப்பிடத் தக்கது. .

 

 
 
 
 

This post has been viewed 191 times