மருதோன்றி இலையின் மருத்துவக்குணங்கள்

 

மருதோன்றி இலையின்ம ருத்துவக்குணங்கள்

மருதோன்றி இலையை இரவு நேரத்தில் பறித்து, அத்துடன் பச்சைப் பாக்கு கொஞ்சம் சேர்த்து அரைத்து படுக்கப் போகும் முன் கை, கால் விரல்களிலுள்ள நகங்களில் வைத்து காலையில் சுத்தம் செய்து வந்தால், நன்கு சிவப்பாக பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

514u-HgRQbL

மருதோன்றி இலை 10 கிராம், மிளகு, வெள்ளைப் பூண்டுப் பல் 1, மஞ்சள் 5 கிராம் சேர்த்து அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு பின்னர் 1 டம்ளர் பால் குடிக்க உடல் நமைச்சல், அரிப்பு குணமாகும். (3 வாரம் தொடர்ந்து சாப்பிடவும். அது சமயம் புகை, புளி, காரம் நீக்க வேண்டும்.)

இலையை அரைத்து நகப் பாலிசுக்குப் பதிலாகப் போட நக இடுக்குகளில் உள்ள நுண்ணிய கிருமிகளை அழித்து, நகச்சுற்று வராமல் தடுக்கும். இலையை அரைத்து நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கச் சிறு காயம், சிராய்ப்பு, அடி, வாய்ப்புண் குணமாகும்.

kina-kina-otu

கைப்பிடியளவு இலையை எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் போட்டு இலைகள் கருகும் வரை காய்ச்சி பின்னர் இறக்கி வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர முடி உதிர்வது நிற்கும். முடி விழுந்த இடத்தில் முடி முளைக்கும். இளநரை, பித்த நரை, பூனை முடி உள்ளவர்கள் தேய்த்து வர முடி கறுப்பு நிறமாக மாறும்.

இலையை அரைத்து 100 கிராம் அளவு எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலந்து சிறு தீயில் பதமாகப் பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வர, முடி நன்கு வளரும்.

மருதோன்றிப் பூவை தேவையான அளவு எடுத்து படுக்கை அறையில் வைத்து இருந்தால், நல்ல தூக்கம் வரும். இதன் வேர்ப்பட்டையை அரைத்துத் தொடர்ந்து கட்டிவர கால் ஆணி குணமாகும்.

வேர்ப்பட்டையால் இன்னொரு பயனும் உண்டு. இதன் பட்டையைப் பாலில் அரைத்துப் பற்றுப்போட வெண்மேகம் குணமாகும். மருதோன்றி இலையை 20 கிராம் எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலையில் மட்டும் 3 நாளுக்குக் குடித்து வர வெள்ளை, பெரும்பாடு, அதிகமான சிறு நீர் போக்கு குணமாகும் (மூன்று நாட்களுக்கு பால் சோறு சாப்பிடவும்)..

இலையை அரைத்துச் சொத்தை நகங்களுக்கு வைத்துக் கட்டி ஈரம் படாமல் 3 நாட்கள் வைத்திருந்து, மீண்டும் அதேபோல கட்டி வரச் சொத்தை நகம் விழுந்து புதியதாக நல்ல நகம் முளைக்கும்.
இலை, விதை சம அளவாக எடுத்து அரைத்து சிறு துணியில் அரை நெல்லிக்காயளவு முடிந்து கருவாயில் திணித்து வைக்க பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை, பெரும்பாடு 4 நாளில் குணமாகும். தினமும் புதியதாகச் செய்யவும்.

மருதோன்றிப் பூவை, இரவு நேரங்களில் தலையணையின் கீழ் வைத்துப் படுக்க நித்திரை உண்டாகும். உடல் சூடு தணியும். இதன் இலைச் சாற்றை தாளகத்தை இழைத்து வெண்குட்டத்தின் மேல் பூசிவர நிறம் மாறும். மருதோன்றி இலைகளை அரைத்துப் பற்று போட்டால் தலைவலி நீங்கும். இதன் விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வர உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும்.!!!.

 
 
 
 

This post has been viewed 912 times