சமூக போராளி ஆங்-சான்-சூகிக்கு இது அழகா?

 

சமூக போராளி ஆங்-சான்-சூகிக்கு இது அழகா?

அன்றைய சமூக போராளி, இன்றைய மியான்மர் நாட்டின் அதிபரின் ஆலோசகரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான ஆங்-சான்-சூகி. இவரது தந்தை ஆங்-சான் பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர். 1947–ல் அவர், எதிரிகளால் கொல்லப்பட்டு விட்டார். அதன் பின் ஆங்-சான்-சூகி, தனது தந்தையின் “தேசிய அமைப்புக்கட்சி” க்கு தலைமை ஏற்று, தாழ்த்தப்பட்ட சமூகத்துக்காக போராடினார்.

Aung San Suu Kyi Calls for More Investment

 

ஆங்-சான்-சூகிக்கு 1990–ல் மனித உரிமைக்காக போராடியதற்காக “சக்காரோவ்” விருதுக்கு அறிவிக்கப் பட்டது. ஆனால், அன்றைய மியான்மர் அரசு அவரை சிறையில் அடைத்து இருந்ததால், அந்த விருதை அவர் வாங்க முடிய வில்லை. சிறையில் இருந்து விடுதலையான பின் இந்த விருதை, 2013–ல் பெற்றுக்கொண்டார். அமைதிக்கான “நோபல்” பரிசையும் அவர் பெற்றுள்ளார்.

இப்படிப்பட்ட சமூக போராளி ஆங்-சான்-சூகியின் இன்றைய ஆட்சியில் சிறுபான்மை மக்களாகிய “ரோஹிங்கியா” இன இஸ்லாமியர்கள் நசுக்கப்பட்டு, ரத்தம் சிந்தியுள்ளனர். இவர்கள் மியான்மர் நாட்டின் பூர்வீகவாசிகள் அல்ல என்பது, மியான்மர் அரசின் வாதம். இவர்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆயுதம் ஏந்தி போராடத் தொடங்கிய ரோஹிங்கியாக்கள் மீது, ராணுவத்தை மியான்மர் அரசு ஏவியது.

இதில், பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். “உயிர் பிழைத்தால் போதும்” என்ற பரிதாப நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக, அண்டை நாடான வங்க தேசத்துக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிப்பதில், வங்க தேச அரசு திணறி வருகிறது.

இதனால் வங்க தேசம், ஐக்கிய நாட்டு சபையின் கதவை தட்டியுள்ளது. தங்கள் நாட்டுக்கு வந்துள்ள ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருப்பதால், ஐக்கிய நாட்டு சபை இந்த பிரச்சினையில், உடனடியாக தலையிட்டு, வங்க தேசத்திற்குள் வந்துள்ள அகதிகளை, மீண்டும் மியான்மர் நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோள், ஆங்-சான்-சூகியின் காதில் விழாமலா இருக்கப் போகிறது? சமூக போராளியாக “இருந்த“ ஆங்-சான்-சூகியே, இது உங்களுக்கு அழகா?.

 
 
 
 

This post has been viewed 435 times