வாழ்வின் அந்தரங்கம்

 

வாழ்வின் அந்தரங்கம்

* எனது மனைவிக்கு 47 வயது ஆகிறது. எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எனது மனைவியோ சமைப்பதும் இல்லை., மகன்களை கவனிப்பதும் இல்லை. ஏதோ பைத்தியம் பிடித்தவள் போல் இருக்கிறாள். ஏதாவது கேட்டால், கோபப்படுகிறாள். தனியாக அவளது அறையில் இருந்து கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டே இருக்கிறாள். நானேதான் காலையிலேயே சமையல் எல்லாம் செய்கிறேன். அவளை சாதாரண நிலைக்கு கொண்டு வருவது எப்படி?

* நல்ல மன நல மருத்துவரிடம் உங்கள் மனைவியை உடனடியாக அழைத்துச் செல்லவும்.!!!.

* டாக்டரம்மா ! நான் அரசு துறையில் வேலை செய்யகிறேன். 27 வயதான எனக்கு பார்த்து இருக்கும் பெண்ணுக்கு வலிப்பு எப்போதாவது வரும் என்று கூறுகிறார்கள். அந்த பெண்ணை திருமணம்செய்யலாமா? பிற்காலத்தில் குழந்தை பேறு போன்றவற்றில் பிரச்சினை ஏற்படுமா?

* வலிப்பு நோய்க்கு 3 முதல் 5 ஆண்டுகள் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். அந்த சமயத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பது நல்லது. நரம்பியல் மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.!!!.

* டாக்டரம்மா! எனது குழந்தை சரியாக படிக்க மாட்டேன் என்கிறாள். பிரம்பை எடுத்தால், அதற்கு பயப்பட்டு, மிகவும் நடுங்கிக்கொண்டே படிக்க தொடங்குகிறாள். இப்படியே அவளை எத்தனை ஆண்டுகளுக்கு படிக்க வைப்பது.? அவள், தானாக படிக்க நான் எந்தமாதிரி முறையை கையாள வேண்டும்? உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

* பிரம்பை எடுத்து மிரட்டி படிக்க வைப்பது சரியல்ல. சிறுவயதில் பாட்டுகளையும், கதைகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். பயமுறுத்தி பாடங்களை சொல்லிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அது நல்லது அல்ல.!!!.

* டாக்டரம்மா! 50 வயதான எனது கணவருக்கு சமீபத்தில் பை-பாஸ் ஆபரேஷன் நடந்தது. அதன் பின்பும் அவர் உடல் உறவில் நாட்டம் கொள்கிறார். அவருக்கு ஆலோசனை கூறுங்கள்.

* அவருக்கு ஆபரேஷன் செய்த இதய மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி செயல்படுங்கள்.!!!.

 
 
 
 

This post has been viewed 219 times