மின்மினிச் செய்திகள்

 

மின்மினிச் செய்திகள்

முகத்தில் சுருக்கம் மறைய…

சில பெண்களின் முகத்தின் தோல், சுருக்கம், சுருக்கமாக காணப்படும். இப்படிப்பட்டவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும். சிலர் நெற்றிப்பகுதியை அடிக்கடி சுருக்கி சுருக்கி பேசுவார்கள். இப்படிப்பட்டவர்கள், தங்கள் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க, தினமும் ஸ்டாபெர்ரி சாப்பிட வேண்டும்.

фото девуш

தினமும் 3 நெல்லிக்காய்களும் சாப்பிடலாம். தரமான சந்தன தூளை தண்ணீரில் குழைத்து, இரவு நேரத்தில் முகத்தில் பூசி விட்டு,காலையில் எழுந்ததும், இளம் சூடான தண்ணீரில் கழுக வேண்டும்.!!!.

திராட்சை தரும் ஆரோக்கியம்

திராட்சை பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. திராட்சை ரசம், அதிக சக்தியை கொண்டது. அதனை தினமும் மூன்று வேளை 10 ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

3990520 (1)

வயிற்று புண் குணமாகும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமான குடும்பத்துக்கு திராட்சை ரசம் சிறந்தது.!!!.

செரிமானத்தை தூண்டும் கோவங்காய்

கிராமங்களிலும், நகரங்களிலும் சாதாரணமாக கிடைக்கும் கோவங்காயில் மருத்துவ குணங்களும் உள்ளன.

dscn4666

சர்க்கரை நோயை குறைக்கும் தன்மை வாய்ந்த இந்த கோவங்காய், கல்லீரலுக்கும், ஈரலுக்கும் பலம் கொடுக்கும். இதனை கூழாக்கி, தோலில் ஏற்படும் ஊறல் போன்றவற்றுக்கும் பயன் படுத்தலாம். செரிமானத்தையும் கோவங்காய் சீர்படுத்தும்.!!!.

மலர்களின் அழகு குறிப்பு

மலர்களால், பெண்கள் தங்கள் முகத்தை பொலிவுறச் செய்ய முடியும். இதற்கான வழிமுறைகளை பார்ப்போம்…..

1.இரவில், சாமந்தி பூவை கொதி நீரில் போட்டு மூடி வைத்து விட்டு, காலையில் எழுந்ததும் அந்த நீரைக்கொண்டு, முகத்தை கழுகினால், முகம் அழகு பெறும்.

201511260924030028271001448529843

2.பன்னீர் ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து, இரவில் முகத்தில் பூசி விட்டு, காலையில் லேசான சுடு நீரில் கழுகினால், முகம் பள பள என்று மாறுமாறும்.

3.மல்லிகைப்பூவுடன் சந்தனத்தையும் சேர்த்து அரைத்து, அதனை கழுத்து பகுதியில் பூசிவந்தால், கழுத்து பகுதியில் ஏற்படும் கருப்பு நிறம் மறையும்.

4. தாமரை இதழ்களை பால் விட்டு அரைத்து, முகத்தில் பூசினால், சருமம் மென்மையாக மாறும்..!!!.

 
 
 
 

This post has been viewed 172 times