போலீஸ் கிரைம்

 

 போலீஸ் கிரைம்

திருமணத்துக்கு மறுத்த காதலியை கொலை செய்து விட்டு, காதலன் தற்கொலை

திருமணத்திற்கு மறுத்த காதலியை அரிவாளால் வெட்டி விட்டு, காதலன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்துள்ளது.

Untitled-1

 

அந்த ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த கல்பனா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் திருமணத்துக்கு கல்பனா மறுத்து விட்டார். சம்பவத்தன்று, வயலுக்கு சென்று கொண்டிருந்த கல்பனாவை பின் தொடர்ந்த சரவணன், அவரை சரமாரியாக வெட்டினார். பின்னர் கல்பானவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதனிடையே வீட்டிற்கு சென்ற சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.!!!.

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
செய்ததாக காதலன் உள்பட 4 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகள்கள். அதில் முதல் மகள் தற்போது 9- ம் வகுப்பு படித்து வருகிறார்.14 வயதான இச்சிறுமி கடந்த 9–ம் தேதி கருங்கல் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.

rape-small

இதுக்குறித்து, கருங்கல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் தேடி வந்த நிலையில், மார்த்தாண்டம் அருகே விரிகோடு என்னும் பகுதியில் ஒரு சிறுமியை நான்கு பேர் இரு சக்கர வாகனத்தில் கடத்தி செல்ல முற்பட்டபோது, பொதுமக்கள் பிடித்து விசாரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்தபோது, அந்த சிறுமி, நிர்மலாவின் மகள் என்பது தெரிய வந்தது.

அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்று, குளச்சலில் ஒரு லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், குளச்சல், குறும்பனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமி மற்றும் நான்கு வாலிபர்களும் குளச்சல் காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இதில் 4 வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளே! யாரையும் நம்பி செல்லாதீர்கள். பொல்லாத உலகம் இது.!!!.

 
 
 
 

This post has been viewed 147 times