சத்தியம் பதில்கள்

 

சத்தியம் பதில்கள்

( தாமஸ், சென்னை):

“நீட்” தேர்வை எதிர்த்து உயிர் தியாகம் செய்த அனிதாவுக்கு, அவர் உயிரோடு இருந்த போது, அரசியல் கட்சிகள் குரல் கொடுத்திருந்தால், அல்லது நிதி ஆதாரம் திரட்டி அவருக்கு மருத்துவ படிப்புக்கு தனியார் கல்லூரிகளிலாவது இடம் வாங்கி கொடுத்திருந்தால், அவரது உயிர் பறி போயிருக்காது அல்லவா?

காகம் இறந்த பின்தான், காக்கை கூட்டம் கூடும் என்பது உமக்கு தெரியாதா?.!!!.

( தங்கராசு, செங்கை):

கருணாநிதி நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால், தற்போதுள்ள நிலையில் அதிமுக அரசை ஒரு கை பார்த்து இருப்பார் அல்லவா?

கருணாநிதி வேறு… ஸ்டாலின் வேறுதான்… இவ்வளவு நீண்ட காலம் இடைவெளி கொடுத்திருக்க மாட்டார் என்பது உண்மையே… ஆனால், வெற்றி பெற்று விடுவாரா? என்பதை தேர்தல்தான் முடிவு செய்யும்.!!!.

( ரமேஷ், மதுரை):

ரஜினி அரசியலுக்கு வருவாரா? அல்லது கமல் அரசியலுக்கு வருவாரா?

இருவருமே, தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் சூழலில், அரசியலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால், வெற்றி பெறும் அணியில் யார் இருப்பார்கள் என்பதுதான் கேள்வி.!!!.

(தமிழ் செல்வி, செங்கம்):

சசிகலாவுக்கும், தினகரனுக்கும் ஆதரவான கருத்துக்களை, பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணிய சுவாமி பேசி வருகிறாரே?

அவரது கருத்துக்கள், அவர் சார்ந்து இருக்கும் கட்சியான பாஜக-வுக்கு எதிரானதாக இருக்கும் என்பதற்கும் இதுவும் ஒரு உதாரணம். ஏற்கனவே பல முறை, இது போன்ற எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.!!!.

(பால்ராஜ், சென்னை):
எடப்பாடி முதல்வராக பணியாற்றும் நிலையில், பன்னீர் செல்வம் துணை முதல்வராக பணியாற்றுகிறார். பன்னீர் செல்வம் இருக்கும் இடமே வெளியே தெரிய வில்லையே?

இரவும், பகலும் மாறி மாறித்தானே வரும்.?!!!.

( லோகேஷ், கோவை):

வல்லரசான அமெரிக்காவை, சிறிய நாடான வட கொரியா எதிர்க்கிறதே?இப்படி தைரியமாக அமெரிக்காவை எதிர்க்க , வட கொரியாவுக்கு பின்னணியில் இருப்பது யார்?

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, வட கொரியா இன்று நேற்றல்ல… பல ஆண்டுகளாகவே, அமெரிக்கா எதிர்ப்பு நிலையை கையாண்டு வருகிறது. வட கொரியாவுக்கு சில நாடுகள் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகின்றன.!!!.

( ராகேஷ் குமார், கோவை):

முன்னாள் ரெயில்வே அமைச்சரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் குடும்பமே, ஊழல் புகாரில் சிக்கியதாக இருக்கிறதே?

உண்மைதான். ஜனநாயக நாடாக இருப்பதால் தப்பி இருக்கிறார். அவருக்கு யாதவ் சமூக ஓட்டுகள் அவருக்கு பின்னால் இருப்பதால், அவர் இன்னும் தப்பிப்பிழைத்துக் கொண்டு வருகிறார்.!!!.

( சக்கர வர்த்தி, தாம்பரம்):

தமிழ் நாட்டில் இப்போது தேர்தல் வந்தால், சாதி வெல்லுமா? சக்கரம்( பணம்) வெல்லுமா?

ஈட்டி எட்டும் மட்டுமே குத்தும். பணம் பாதாளம் வரை செல்லும்.!!!.

 
 
 
 

This post has been viewed 93 times