உலகின் மிக நீளமான இமை முடிகள் கொண்ட பெண்; கின்னஸ் சாதனை!

 

உலகின் மிக நீளமான இமை முடிகள் கொண்ட பெண்; கின்னஸ் சாதனை!

சீனாவைச் சேர்ந்த 48 வயது யு ஜியான்ஸியாவின் இமை முடிகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிக நீளமானவை!
சாதாரணமாக மனிதர்களின் இமை முடிகள் 0.8 முதல் 1.2 செ.மீ. வரை நீளம் இருக்கும்.

tmp_flOaHd_fd49a6c96c439a16_longesteyelashes3-768x512

ஆனால் ஜியான்ஸியாவின் இமை முடிகள் 12.4 செ.மீ. நீளம் இருக்கின்றன! இவள்,. ‘உலகின் மிக நீளமான இமை முடிகள்’ என்ற கின்னஸ் சாதனையைப் பெற்றுவிட்டாள்.

உலகம் முழுவதும் 500 பேர் இதற்கான கின்னஸ் போட்டியில் போட்டியிட்டனர். அதில் ஒருவர் கூட இவருக்கு அருகில் வர முடியவில்லை. இது குறித்து அவள் கூறுகையில், “என்னுடைய இமை முடிகள் கின்னஸ் அமைப்பினரால் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவு எடுக்கப்பட்டன. ஓராண்டில் இன்னும் சற்று அதிகமாக முடிகள் வளர்ந்துவிட்டன. எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு நீளமாக இமை முடிகள் வளர்கின்றன என்று ஆச்சரியமாக இருக்கிறது.

74bcc3627b1376b9b88dfc5f927fe09c

நான் கோடிக்கணக்கில் பணம் புரளும் மிகப் பெரிய நிறுவனத்தில் சேர்மேனாக பதவி வகித்துவந்தேன். இயற்கை மீது தீராத ஆர்வம் எனக்கு உண்டு. அதனால் மிகப் பெரிய தோட்டத்தை உருவாக்கினேன். அதில் 1600 வகை ரோஜா செடிகளை வளர்த்துவந்தேன். அப்போதுதான் என் இமை முடிகள் மிக நீளமாக வளர ஆரம்பித்தன. அதற்கு முன்பு வரை நான் சாதாரணமாகத்தான் இருந்தேன். தோட்டத்துக்கும் என் இமை முடிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்று கூட யோசித்திருக்கிறேன்.

tmp_pjKtCe_6b6c918a70fe60ab_longesteyelashes1-768x512

 

நீளமாக வளர ஆரம்பித்தவுடன் அதை வெட்டாமல் விட்டுவிட்டேன். என் வாய் வரை வளர்ந்துவிட்டன. எல்லோரும் இது எனக்குக் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். நான் ஒருநாளும் எந்தவித அசவுகரியத்தையும் உணர்ந்ததில்லை. உலகிலேயே நீளமான இமை முடிகளுக்குச் சொந்தக்காரி என்பதில் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது. தவறுதலாக முடிக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

நீளமான இமை முடிகள் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் குறிப்பதாகப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவை முகத்தைச் சுத்தம் செய்யும்போதும் கவனமாக இருக்கிறேன்” என்கிறார் ,யு ஜியான்ஸியா.!!!.

சிரிக்கும்போது அப்படியே தூங்கிவிடும் இளம்பெண்: விசித்திர நோயால் அவதி..!!

வாய்விட்டு சிரிக்கும் போதும் திடீரென அப்படியே தூங்கிவிடும் விசித்திர நோயால் இளம் பெண் ஒருவர் பாதிக்கபட்டுள்ளார்.
இங்கிலாந்தின் நாட்டின்காம் நகரை சேர்ந்தவர் ஜெசிக்கா (20). இவருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.

ஜெசிக்கா, “கேட்டா பிளக்சி” என்ற விசித்திர நோயால் பாதிக்கபட்டுள்ளார். அதாவது, எதையாவது நினைத்து அவர் சிரித்தால் அடுத்த நொடியில் அவர் தூங்கிவிடுவார்.
தூங்கும் சமயத்தில் அவர் மூளை செயல்பாட்டில் தான் இருக்கும். அருகில் நடக்கும் விஷயங்களை அவரால் உணர முடியும். ஆனால் எழுந்திருக்க முடியாது.

தசைகள் பலமாக இல்லாததால் உடல் சோர்வடைந்து அவருக்கு இப்படி தூக்கம் வந்துவிடுகிறது. பல்வேறு மருத்துவ சிகிச்சையளித்தும் அவருக்கு இந்த நோய் பிரச்சனை தீரவில்லை. இது குறித்து ஜெசிக்கா கூறுகையில், “பதினாறு வயதில் இந்த பிரச்சனை எனக்கு ஏற்பட்டது. உறவினருடன் பேசி கொண்டிருக்கும் போது அவர் கூறிய ஜோக்கை கேட்டு சிரித்து அப்படியே தூங்கிவிட்டேன். தற்போது இது பழகிவிட்டதால் தூக்கம் வரப்போவதை உடனே அறிந்து கொண்டு படுக்கை அல்லது தரை பகுதிக்கு சென்று விடுவேன்” என ஜெசிக்கா கூறியுள்ளார்.!!!.

மீண்டும் தொடங்கிய ஆசிட் வீச்சு! கதறும் அமெரிக்க மாணவிகள்

அமெரிக்காவிலிருந்து பிரான்ஸுக்கு சுற்றுலா வந்த நான்கு மாணவிகள் மீது ஆசிட் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸுக்கு அமெரிக்காவின் பாஸ்டன் கல்லூரியை சேர்ந்த நான்கு மாணவிகள் சுற்றுலா சென்றுள்ளனர்.

நால்வரும் மெர்செலி நகர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த பெண் ஒருவர் தான் வைத்திருந்த ஆசிட்டை அவர்கள் மீது வீசினார். இதில் இரண்டு மாணவிகள் முகத்தில் ஆசிட் பட்டு விட்டது., மற்ற இரு மாணவிகளின் உடல் பகுதியில் ஆசிட் பட்டு விட்டது. இதையடுத்து காயம் அடைந்த நால்வரையும் அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையில் மாணவிகள் மீது ஆசிட் வீசிய 41 வயதான பெண்ணை கைது செய்துள்ள போலீசார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளனர்.!!!.

 
 
 
 

This post has been viewed 152 times