நீதிமன்றமா? மக்கள் மன்றமா?

 

தமிழக அரசியலில் இப்போது மிக முக்கியமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 1987 டிசம்பர் 24–ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, ஆர்.எம். வீரப்பனின் உதவியுடன் ஜானகி அம்மாள் முதல்வரானார். அப்போது அ.தி.மு.க. கட்சியில் 132 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவர்களில் ஜானகி அம்மாளுக்கு ஆதரவாக 96 எம்.எல்.ஏ.க்களும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 32 எம்.எல்.ஏ.க்களும் இருந்தனர். அ.தி.மு.க கட்சியில் கோலோச்சுவது ஜானகி அம்மாளா? ஜெயலலிதாவா? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுக்கவே, சட்டமன்றத்தில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஜானகி அம்மாளுக்கு ஏற்பட்டதால், பலப்பரீட்சை நடந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களையும், அன்றைய சபாநாயகர் பி.எச். பாண்டியன் தகுதி நீக்கம் செய்து விட்டார். இதனைத்தொடர்ந்து, ஜானகி அம்மாள் தனது மெஜாரிட்டியை நிரூபித்து விட்டார். என்றாலும், அவரது ஆட்சி, மத்திய அரசால் கலைக்கப்பட்டது என்பது வரலாறு.
இப்படிப்பட்ட முந்திய உதாரணம் இருக்கும் நிலையில், சமீபத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர்களை, தற்போதைய சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்துள்ளார். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளனர். இதன் பலனாக, சட்டசபையில் பலப்பரீட்சை நடத்த ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீடித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இனி, “நீதிபதிகள்” எப்போது அடுத்த உத்தரவை பிறப்பிப்பார்கள்? அந்த உத்தரவு எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு, தமிழக அரசியல்வாதிகளிடம் மிகப்பெரிய அளவில் உருவாகி இருக்கிறது.
இதற்கிடையில் தி.மு.க-வை சேர்ந்த 89 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரசை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும், முஸ்லிம் லீக்கை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.யும் ஒட்டுமொத்தமாக பதவி விலகினால், தமிழ் நாட்டில் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டு விடும். அப்படி ஒரு நிலை உருவானால், தமிழக மக்கள் மீண்டும் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது மக்கள்தான் “நீதிபதிகள்”.
தமிழக ஆட்சியை, தீர்மானிக்கப் போவது நீதிமன்றமா? மக்கள் மன்றமா? என்ற கேள்விக்கு, காலமே., நீதான் பதில் சொல்ல வேண்டும்…!!!.

POLITICS

 
 
 
 

This post has been viewed 119 times