ஆஸ்துமாவை விரட்டும் விளாம்பழம்

 

ஆஸ்துமாவை விரட்டும் விளாம்பழம்

 

images (2)

விளாம் பழம் என்பது, இந்தியாவை பாரம்பரியமிக்க பழமாக கருதப்படுகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணம் இருந்தாலும், தெய்வீக குணமும் இருப்பதால், தமிழகத்தில் இந்து ஆலயங்களில் இந்த வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இருமல், ஆஸ்துமா, அலர்ஜியை போக்கும் தன்மை கொண்ட விளாம் பழத்தை, வெல்லத்துடன் கலந்து சாப்பிடலாம்.
சத்துக்கள் மிகுந்த சாத்துக்குடி

images (3)

எல்லா பருவங்களிலும் கிடைக்கும் பழங்களில், சாத்துக்குடியும் ஒன்று. இதில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. இது எலுமிச்சம் பழம் போன்று பெரிய அளவில் தோற்றம் அளிப்பதால், “ ஸ்வீட் லெமன்” என்றும் அழைக்கப் படுகிறது. இதில் இருக்கும் அதிகபடியான வைட்டமின்-சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகிரிக்கிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கும் சக்தியும், சாத்துக்குடிக்கு உண்டு. ரத்த சோகையையும் நீக்கும்.
மலர்களின் அழகு குறிப்பு

download (2)

மலர்களால், பெண்கள் தங்கள் முகத்தை பொலிவுறச் செய்ய முடியும். இதற்கான வழிமுறைகளை பார்ப்போம்…..
1.இரவில், சாமந்தி பூவை கொதி நீரில் போட்டு மூடி வைத்து விட்டு, காலையில் எழுந்ததும் அந்த நீரைக்கொண்டு, முகத்தை கழுகினால், முகம் அழகு பெறும்.
2.பன்னீர் ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து, இரவில் முகத்தில் பூசி விட்டு, காலையில் லேசான சுடு நீரில் கழுகினால், முகம் பள பள என்று மாறும்.
3.மல்லிகைப்பூவுடன் சந்தனத்தையும் சேர்த்து அரைத்து, அதனை கழுத்து பகுதியில் பூசிவந்தால், கழுத்து பகுதியில் ஏற்படும் கருப்பு நிறம் மறையும்.
4.தாமரை இதழ்களை பால் விட்டு அரைத்து, முகத்தில் பூசினால், சருமம் மென்மையாக மாறும்.

images (4)

 
 
 
 

This post has been viewed 167 times