மதுரை பல்கலைகழக பேராசிரியைக்கு கத்திக்குத்து

 

உடல் எடையை குறைக்க, ஒரே மாதத்தில்
9 ஆபரேஷன் செய்த பெண் உயிரிழப்பு

07d16ed7-117f-4034-83b9-b6d56ecc76a8

உடல் எடையை குறைக்க, ஒரே மாதத்தில் 9 ஆபரேஷன் செய்த பெண், சென்னையில் உயிரிழந்தார். அந்த பெண்ணின் பெயர்: வளர்மதி. திருவண்ணாமலையை சேர்ந்த அழகேசன் என்பவரின் மனைவியான இவர், 150 கிலோ எடையுடன் காணப்பட்டார். இதனால், அவளது உடல் எடையை குறைக்க அவர், சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே மாதத்தில் 9 ஆபரேஷன்கள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல், அவள் இறந்து விட்டாள். இது குறித்து வளர்மதியின் உறவினர்கள், போலீசில் புகார் அளித்தனர். கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…!!!

மதுரை பல்கலைகழக பேராசிரியைக்கு கத்திக்குத்து

24306c9c-b1b6-46f8-9471-89bb31e4a9d3

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் ஜெனிபா செல்வின், பல்கலை கழக வளாகத்தில் பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த மர்ம மனிதன் ஒருவன், ஜெனிபாவை 21 முறை கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார். விசாரணையில், அவரை கவுரவ விரிவுரையாளர் ஜோதி முருகன் கத்தியால் குத்திய தகவல் வெளிப்பட்டது. காயம் அடைந்த ஜெனிபா, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜோதி முருகன் தனது பணியை நிரந்தரம் செய்ய கோரியதாகவும். இதற்கு ஜெனிபா மறுத்ததால், கத்தியால் குத்தியதாக தெரிய வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஜோதி முருகனை கைது செய்துள்ளனர்.

 
 
 
 

This post has been viewed 119 times