ஆல்கஹாலுக்கு ஏன் “மது” என்று பெயர் வைத்தார்கள்?

 

“குடி குடியை கெடுக்கும்”

ஆல்கஹாலுக்கு ஏன் “மது” என்று பெயர் வைத்தார்கள்?

pothayin-aatchi1

 

போதையை கொடுக்கும் ஆல்கஹாலுக்கு ஏன் ‘மது’ என்று பெயர் வைத்தார்கள்?…! ஒருவேளை ‘ம’கிழ்ச்சியில் தொடங்கி ‘து’ன்பத்தில் முடிவதால்கூட இருக்கலாம்…!! என்னதான் “மது உடலுக்கு கேடு விளைவிக்கும் உயிரைப் பறிக்கும்” என்று மதுக்கடைகள் தொடங்கி சினிமா தியேட்டர் வரை போகிற இடமெல்லாம் எச்சரிக்கை விடுத்தாலும், சிலர் அதையெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை.
“இன்றைக்கு ஒரு நாள் மட்டும் தானே” என்று சலனப்பட்டால் இறுதியில் மோசமான நிலைமைக்குச் சீக்கிரமே சென்றுவிடும். பீரைக்கூட தொடக்கூடாது. மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால், தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால், “டி ஹைட்ரோஜீனேஸ்” என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை “அசிட்டால்டிஹைட்“ ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.

ஆல்கஹாலுக்கு ஏன் “மது” என்று பெயர் வைத்தார்கள்?

இது மற்றொரு “என்சை “மான “அசிட்டால்டிஹைட்” டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை, அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த “என்சைம்” சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும்.
மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது. இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்கும். ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும். இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்ப நிலையும் குறையும்.
மது குடித்தவுடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக்கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும்.
மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ்டோர்க், இருதய கோளாறு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்முறை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமானது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.
மது என்ற விஷயம், குடிப்பவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தையும் சேர்த்தே துன்பத்துக்கு ஆளாக்குகிறது.
‘சும்மா ஜாலிக்காக குடிக்கிறேன்’ என்று சொல்பவர்களில் தொடங்கி, ‘விளையாட்டாக ஆரம்பிச்சேன். இப்போது விட முடியலை!’ என்று சொல்வர்கள்.இது அழிவை நோக்கிய பயணம் என்பதை மறவாதீர்கள்.
குடிப்பவர்களை இந்த சமூகம் குடிகாரர்களாகப் பார்க்கிறதே தவிர, நோயாளியாகப் பார்ப்பதில்லை. மதுவைக் குடித்து, அதற்கு அடிமையாவது ஒருவகை நோய். இந்த நோயானது குடிக்கும் எல்லோருக்குமே காலப்போக்கில் வரும். இந்த நோய்க்கு ஆண், பெண் பாகுபாடு கிடையாது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
குடிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்த குடி நோயாளிகள் மருத்துவர்கள் உதவியுடன், குடியை முழுமையாக நிறுத்தி நிறைவான, சந்தோஷமான எதிர்காலத்தை நிச்சயம் உருவாக்கிக்கொள்ள முடியும். இதற்கு, மது குடிப்போர் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் மன திடத்துடன் செயல் பட வேண்டும். “மதுவை தொடவே மாட்டேன்” என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
பொதுவாக குடிப்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அதிகமாகக் குடிப்பவர்கள், எப்போதாவது குடிப்பவர்கள், குடிக்கு அடிமையானவர்கள். இவர்களில் அதிகமாக குடிப்பவர்களும், எப்போதாவது குடிப்பவர்களும் குடிநோயால் பாதிக்கப்படுவதில்லை.
அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் குடிக்கும் பழக்கத்தை நினைத்தவுடன் விட்டுவிட முடியும். ஆனால் குடிக்கு அடிமையாகும் குடிநோயாளிகளால் அப்படிச் சுலபமாக குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட முடியாது. குடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். அது எந்தக் காரணமாக இருந்தாலும் குடிப்பழக்கம் என்பது அழிவை நோக்கியப் பயணம்…!” என்பதை மறந்து

no-alcohol

விடாதீர்கள்…!!!.

 
 
 
 

This post has been viewed 213 times