மின்மினிச் செய்திகள்

 

பன்னீர் செல்வத்தை பதவி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. வழக்கு

அதிமுக கட்சியில் இருந்து பிரிந்த பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் தனியணியாக செயல்பட்டனர். இது போல தினகரன் அணியில் 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். தினகரன் அணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபால், பன்னீர் செல்வம் அணி எம். எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வில்லை. இந்த நிலையில், பன்னீர்செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ.க்களை, கட்சி தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கம் செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக கொறடா சக்கர பாணி, மனு தாக்கல் செய்தார். “இந்த பிரச்சினை குறித்து சபாநாயகரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே நீதிமன்றத்தை நாடி இருக்கிறோம். பன்னீர் செல்வம் உள்பட 12 எம்.எல்.ஏ,க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மனு, அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.!!!..
சொத்து மதிப்பை தெரிவிக்காத மத்திய அமைச்சர்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 31-க்குள், மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் உத்தரவை15 அமைச்சர்கள் மட்டும் நிறைவேற்றியுள்ளனர். 76 மத்திய அமைச்சர்களில், மூத்த அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் மட்டுமே தங்களது சொத்து விபரங்களை அறிவித்துள்ளனர். பியுஷ் கோயல், ஸ்மிருதி இரானி, மேனகா காந்தி, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட 61 அமைச்சர்கள், இன்னும் தங்கள் சொத்து விவரத்தை தாக்கல் செய்யவில்லை. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.!!!..
காங்கிரஸ் தலைவர் ஆகிறார், ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக கடந்த 2013-ம் ஆண்டு ராகுல் காந்தி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் கடந்து விட்டன.இந்நிலையில், மத்தியில் பாஜக பொறுப்பேற்ற நிலையில், பல்வேறு மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதனால் தலைமை பொறுப்பு ஏற்பதை தள்ளிப்போட்டு வந்த அவர், சமீபத்தில் அமெரிக்காவில் பேசிய போது, வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயார் என அறிவித்தார். இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.!!!.

 
 
 
 

This post has been viewed 97 times