துளிர் செய்திகள்

 

“அசல் ஒட்டுநர் உரிமத்தை மறந்து எடுத்து வராமல் இருந்தால் அபராதம் மட்டுமே போதுமானது” –சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

வாகனங்களை ஓட்டும் போது, அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, லாரி உரிமையாளர் சம்மேளனம் தலைவர் சுகுமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “நகல் பாஸ்போர்ட் வைத்து கொண்டு வெளிநாடுகளுக்கு செல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதனால் ஏற்படும் இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும், அதை கொண்டு செல்ல மறந்தவர்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக கூறிய நீதிபதிகள், அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு அரசு அறிவித்த 3 மாத சிறை தண்டனை வழங்கலாம், ஆனால் அசல் ஒட்டுநர் உரிமத்தை மறந்து எடுத்து வராமல் இருப்பதை குற்றமாக கருத முடியாது என்றும் தெரிவித்தனர். மறந்து எடுத்து வராமல் இருப்பவர்களுக்கு அபராதம் மட்டுமே போதுமானதாக இருக்கும் என்ற கருத்தை தெரிவித்து இது தொடர்பாக விரிவான உத்தரவை விரைவில் பிறப்பிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்..!!!.

 

செந்தில் பாலாஜியின் உறவினர்கள் ரூ.60 கோடி வரி ஏய்ப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் 60 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில், பலருக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கரூரில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை 5 நாட்களாக நீடித்தது. இதில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் 60 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜியின் ஆதரவாளரின் நிதி நிறுவனத்திற்கு, வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் செந்தில் பாலாஜியின், உறவினர்களின் 40-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளனர்..!!!.

 

ஜெயலலிதா கைரேகை உண்மைதானா?

தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவு
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வை சேர்ந்த ஏ.கே. போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரி, ஜெயலலிதா கையெழுத்துடன் கூடிய 27–10–2016 தேதிய கடிதத்தை ஏ.கே. போஸ் தாக்கல் செய்துள்ளார். இதில் ஜெயலலிதாவின் கையெழுத்து போலியானது. இதன் உண்மையத்தன்மையை அறிய வேண்டும் என்று சரவணன், இந்த வழக்கில் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், .அக். 6—ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் கையெழுத்தின் உண்மைத் தன்மை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

 
 
 
 

This post has been viewed 108 times