உலகின் மிகப்பெரிய வைரம் – 53 மில்லியனுக்கு ஏலம்!

 

இளமையாக தோற்றமளித்த 41 வயது பெண்ணுக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு

41 வயதில் இளமையாக தோற்றமளித்த பெண்ணை சந்தேகம் அடிப்படையில் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நட்டாலியா டெசன்கு என்ற பெண் துருக்கியில் இருந்து தனது வீட்டிற்கு செல்ல விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் அவரை தடுத்துள்ளனர். அவர்கள் அந்த பெண்ணிடம் கூறிய காரணம் அவரை அதிர்ச்சி அடைய வைத்தது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,”நீங்கள் கொண்டுவந்த பாஸ்போர்ட்டில் 41 வயது என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தை விட 20 வயது இளமையாக உள்ளீர்கள். இதனால் நீங்கள் வேறொருவருடைய பாஸ்போர்ட்டில் பயணிக்க முயற்சி செய்கிறீர்கள் என்ற சந்தேகத்தினால் தடுத்தோம்” என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து நட்டாலியா கூறுகையில், “ என்னுடைய இந்த இளமை தோற்றத்தால் பலரும் என்னை புகழ்ந்துள்ளனர். ஆனால் அந்த தோற்றமே எனக்கு சிரமத்தை அளிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை” என்றார். நட்டாலியா தனது இளைமை தோற்றத்தால் பல ரசிகர்களை பெற்றுள்ளார். இருந்தும் இந்த சம்பவம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்.!!!.

 

உலகின் மிகப்பெரிய வைரம் – 53 மில்லியனுக்கு ஏலம்!

உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது. கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்த ஏலத்தை நடத்தியது. இதன் எடை 1,109 காரட்டாகும். இந்த வைரம் 3,106.75 காரட் குல்லியன் அளவு கொண்டது. இதனை 105 சிறிய வைரங்களாக வெட்டலாம்.
இதை இங்கிலாந்தின் பிரபல கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனம் ஒரு காரட்டிற்கு 47,777 டாலர் வீதம் என்ற கணக்கில் ஏலம் எடுத்துள்ளது. இந்த வைரம் போட்ஸ்வானாவின் சுரங்கம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது. இது 2.5 முதல் 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று கூறுகின்றனர். இதற்கு போட்ஸ்வானாவின் தேசிய மொழியில் “நமது ஒளி” என்று பெயரிட்டிருந்தனர்.
இதுகுறித்து கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லாரன்ஸ் கிராஃப் கூறுகையில்,” பழமையான இந்த வைரமானது மிகவும் பாதுகாப்பான முறையில் வெட்டி பட்டைத்தீட்டப்படும்” எனக் கூறினார்.!!!.

 
 
 
 

This post has been viewed 131 times