மலைப்பாம்பை வளர்த்தவர் பரிதாபமாக மரணம் !!

 

மலைப்பாம்பை வளர்த்தவர் பரிதாபமாக மரணம் !!

இங்கிலாந்தில் மலைப்பாம்பு கடித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஹம்ஸ்ஷயர் பகுதியைச் சேர்ந்த 31 வயதான டான் பிராண்டன் என்பவர் தனது வீட்டில் வளர்க்கப்பட்ட மலைப்பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். அவர் , பாம்பு பிரியர் என்பதால் தான் வளர்க்கும் மலைப்பாம்புகளை புகைப்படம் எடுத்து “பேஸ் புக்” பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவருடைய வீட்டில் டான்பிராண்டன் இறந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுளார். அவருக்கு அருகே பாம்பு ஒன்றும் கிடந்துள்ளது. பாம்புக்கு பசி எடுத்த நிலையில் தனது உணவுக்காக டான் பிராண்டனை விழுங்க முயற்சித்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.!!!.

ஷாப்பிங் சென்ற பெண்ணுக்கு வீதியில் பிறந்த குழந்தை:
மனிதாபிமானத்துடன் உதவிய பெண்

சீனாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஷாப்பிங் சென்ற போது விதியில் குழந்தை பெற்றேடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் புசோகு பகுதிக்கு ஜெங் மெகின் என்ற கர்ப்பிணிப் பெண், காலை 8 மணிக்கு ஷாப்பிங் சென்றுள்ளார். நிறைமாத கர்ப்பிணி என்பதால், அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்ட அருகில் இருந்த ஒரு பெண் அவருக்கு, சாலையோரத்தில் பிரசவம் பார்த்துள்ளார். அப்போது அருகில் இருந்த மக்கள் இது தொடர்பான வீடியோவை எடுத்துள்ளனர்.
குழந்தை பிறந்த பின்னர் குழந்தையின் உடலில் இருந்த இரத்ததை துடைத்துவிட்டு, அப்பெண்ணே தொப்புள் கொடியை வெட்டியதாகவும், அதன் பின் உடனடியாக மருத்துவனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவர் மருத்துவனையில் பத்திரமாக அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிறந்த குழந்தை 3.8 கிலோ இருந்ததாகவும், குழந்தையும், தாயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.!!!.

 
 
 
 

This post has been viewed 104 times