சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் அடுத்த பாடல் தகவல்

 

சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் அடுத்த பாடல் தகவல்118138-tsk2

சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” பட படப்பிடிப்பு வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. படக்குழுவும் வரும் பொங்கல் ஸ்பெஷலாக , இந்த படம் வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.
இந்த படத்தில் இடம்பெறும் “நானா தானா “என்ற பாடல் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல் “சொடக்கு தெறிக்குதுமா “என்று தொடங்குமாம்.
அனிருத் இசையமைத்த இப்பாடல் முழுக்க முழுக்க மாஸ் நடனம் இடம்பெறும் பாடலாக ,படத்தில் அமைந்திருப்பதாக தெரிய வருகிறது.
ஆராத்யா என் தங்கையே அல்ல! கோபத்துடன் கூறிய அஞ்சலி

DKfzlMGU8AAvMtb

பல வருடங்களுக்கு முன்பு நடிகை அஞ்சலி மற்றும் அவரது சித்தி பாரதி தேவி இடையே சண்டை வெளிப்படையாகவே நடந்தது. அவரின் உறவை முறித்து தற்போது அஞ்சலி தனியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் பாரதி தேவியின் மகள் ஆராத்யா தற்போது ஹீரோயினாக தெலுங்கில் அறிமுகமாகிறார். இதற்காக ஹைதராபாத்தில் நடத்த பிரெஸ்மீட்டில் அஞ்சலி, தன் சகோதரி என பேசினார் ஆராத்யா.
இதற்கு கோபமாக மறுப்பு தெரிவித்த அஞ்சலி ,” எனக்கு ஒரே ஒரு அக்கா மட்டுமே இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும் வேறு யாரும் எனக்கு சகோதரி இல்லை” என கூறினார்.அஞ்சலி இப்படி கூறியது பற்றி தற்போது பேட்டியளித்துள்ள ஆரத்யா, “அவர் மறுக்கிறார் என்பதற்காக உண்மை மாறிவிடுமா” என கேட்டுள்ளார்.

anjali-chitrangada-movie-stills1

 

 
 
 
 

This post has been viewed 568 times