ராகுல் ப்ரீத்தின் நிறைவேறாத ஆசை

 

“விஜய் அரசியலில் உங்களுக்கு போட்டியாக இருப்பாரா?”– கமல்ஹாசன் பதில்

vijay_13590084991

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் என பல நடிகர்களைப் பற்றி அரசியல் பேச்சுகள் இப்போது நிறைய வருகிறது. அண்மையில் ஒரு பேட்டியில் ,நடிகர் கமல்ஹாசனிடம் “விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு போட்டியாக இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், “அவர் என்ன திட்டத்தோடு வருகிறார், எந்த மாதிரி மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார், நாங்கள் நினைக்கும் எதிர்காலத்துக்கு இடையூறாக இருந்தால் அதற்காக விமர்சனம் வைக்கப்படும். நாங்கள் செய்யும் விஷயங்களை செய்பவராக இருந்தால் ஆதரவு தெரிவிப்போம்” என பேசியுள்ளார்.
அவதார் இரண்டாம் பாகம் தொடங்கியது- மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

maxresdefault (4)

ஹாலிவுட் சினிமாவை தாண்டி ஒட்டுமொத்த உலகளவில் இருக்கும் சினிமாவை ஆச்சரியப்பட வைத்த ஒரு படம்,”அவதார்”. இந்த படம் செய்த சாதனைகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. டிசம்பர் 18–ம் தேதி 2020–ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ள இப்படத்தின் பட்ஜெட் விவரம் வெளியாகியுள்ளது.
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் மொத்த பட்ஜெட்: 1 பில்லியன் பட்ஜெட் என கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அவதார் 3 டிசம்பர் 2021-ம் ஆண்டும், அவதார்- 4 டிசம்பர் 2024–ம் ஆண்டும், அவதார் -5 டிசம்பர் 2025 –ம் ஆண்டும் வெளியாக இருக்கிறது என படக்குழு ஏற்கெனவே அறிவித்துவிட்டனர்.

இப்படி ஒருமுறை டேட்டிங் போக வேண்டும்.. ராகுல் ப்ரீத்தின் நிறைவேறாத ஆசை

rakul-preet-singh-13a

முருகதாஸ் இயக்கியுள்ள “ஸ்பைடர்” படத்தில் ஹீரோயினாக, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார், ராகுல் ப்ரீத். இந்த படத்தின் ட்ரைலரில் “பிளைண்ட் டேட்டிங் “செல்லவேண்டும் என ஒரு காட்சியில் கூறுவார். அது போல நிஜ வாழ்க்கையிலும் செல்ல ஆசை இருப்பதாகவும், அது இதுவரை நிறைவேறவில்லை என்றும், ஸ்பைடர் பிரெஸ் மீட்டில் ராகுல் தெரிவித்துள்ளார்.

 

 

 
 
 
 

This post has been viewed 677 times