இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்ட வழக்கில் தினகரன் கைது ஆவாரா?

 

இந்திய இறையாண்மைக்கு
எதிராக செயல்பட்ட
வழக்கில் தினகரன் கைது ஆவாரா?

சேலத்தில் கடந்த மாதம் 29–ம் தேதி தினகரன் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடாசலம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ”நீட்” தேர்வு பிரச்சனை குறித்து அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ததாக, அதிமுக பிரமுகர் சண்முகம் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

60345877

 

இந்த புகாரின் அடிப்படையில் அன்னதானப்பட்டி போலீசார், அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வெற்றி வேல், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.கே. செல்வம், வெங்கடாசலம், சேலம் மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி உள்ளிட்ட 36 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட வெங்கடாசலம், சூர்யா, சந்திரன், டாக்டர் சசிகுமார், கலைவாணி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் எஞ்சியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தினகரன் ஆதரவாளர்களாக இருப்பதால் தங்களை போலீசார் கைது செய்துள்ளதாக வெங்கடாசலம் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், தினகரனை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று தனிப்படையினரும் தனித்தனியாக செயல்பட்டு, தினகரனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில், “என் மீதான தேச துரோக வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன். இந்த வழக்கின் முன் ஜாமீன் பெற மாட்டேன்” என்று தினகரன் செய்தியாளர்களிடம் சென்னையில் கூறியுள்ளார்….!!!.

7 பிரிவுகளில் வழக்கு…!

தினகரன் உள்ளிட்ட 36 பேர் மீதும் 7 பிரிவுகளில் வழக்கு பதிவாகி இருக்கிறது. இ.பி.கோ சட்டபிரிவு 143 (அதிக நபர் கூடுதல்), சட்டப்பிரிவு 120 பி (கூட்டுச்சதி), 124 கி (மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படுதல்), 153 (வன்முறை, கலகத்தை தூண்டுதல்), 500 (அவதூறு பரப்புதல்), 504 (பொது அமைதிக்கு பங்கம்), 506 (2) மிரட்டல் ஆகிய 7 பிரிவுகளில் வழக்கு பதிவாகி இருக்கிறது. இதில் இரண்டு பிரிவுகள் ஜாமீன் பெற முடியாத பிரிவு களாகும்.

 
 
 
 

This post has been viewed 137 times