வாழ்வின் அந்தரங்கம்

 

 வாழ்வின் அந்தரங்கம்

* குற்றாலம் அருவியில் குளிக்கும் முன் உடலை மசாஜ் செய்கிறார்களே? இது மருத்துவ ரீதியில் ஏற்புடையதா? சரியா? தவறா?

*MILD-ஆக மசாஜ் செய்வது நல்லதுதான். ஆனால், முரட்டுத்தனமாக மசாஜ் செய்வதினால், தசை நார்கள் கிழிந்து விட வாய்ப்புகள் உள்ளன.!!!.

* தற்போதைய உலகில், சிறுமிகள் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறதே… இதனை தடுக்க என்ன வழி?

* இது சமூகத்தின் குற்றமாகவும், அரசின் குற்றமாகவும், தனி மனிதனின் குற்றமாகவும் கருதலாம். என்றாலும், தனி மனிதன் திருந்தினால்தான் குற்றங்கள் குறையும்.!!!.

* டாக்டர்! இது ஒரு சமூகவியல் கேள்வி. டெல்லி போன்ற பெரு நகரங்களில் சிறுமிகள் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறதே… இது சமூகத்தின் குற்றமா? அரசின் குற்றமா? தனி மனிதனின் குற்றமா?

* மூன்று பேருடைய குற்றமும் சேர்ந்ததுதான்..!!!.

* டாக்டர்! தற்போது பெண்கள், திருமணம் ஆனதும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. ஆனால் அவர்களது பெற்றோர், உடனே குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். இந்த நவீன கலாச்சாரம் ஏற்புடையதா? உங்கள் கருத்து என்ன?

* நவீன கலாச்சாரத்தில், பெண்கள் நிறைய படிப்பதும், ஆண்களைப்போல் வேலைக்கு செல்வதும் சகஜமாகி விட்டதால், குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார்கள். முதல் குழந்தையை 22 வயது முதல் 30 வயதுக்குள் பெற்றுக் கொள்வது நல்லது.!!!.

 
 
 
 

This post has been viewed 183 times