மின்மினிச் செய்திகள்

 

மின்மினிச் செய்திகள்

ஆரோக்கிய வாழ்க்கைக்கு…

*தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

camphor_1024x1024

*தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும்.

*வெயில் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து, பாலோடு சேர்த்து, சர்க்கரை போட்டுச் சாப்பிட, வயிற்றுவலி பறந்து விடும்.

*ரோஜா இதழ்களுடன் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும்., வாய்மணக்கும்.!!!.

முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம் மட்டுமே உள்ளது. ஆனால், மஞ்சள் கருவில் புரத்ததுடன் கொழுப்புச் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் அடர்த்தி அதிகம். இது, ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற உதவுகிறது.

tmp909535550992547843

மஞ்சள் கருவில் உள்ள விட்டமின் கே, எலும்புகளின் வலிமையை அதிகரித்து, ஆஸ்டியோபோரசிஸ் வராமல் தடுக்கிறது. மஞ்சள்கருவில் உள்ள செலினியம், மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது..!!!.

இளமையாக வாழ எப்படி சாப்பிட வேண்டும்?

காலை ஆறு மணிக்கு எழுந்து உடற்பயிற்சியை முடித்துவிடுங்கள். சுகமான காற்று முகத்தில்படும் போது, புத்துணர்ச்சி கிடைக்கும். பிறகு, அரை மணி நேரம் கழித்து பால், காபி, டீ என ஏதாவது ஒன்றைக் குடிக்கலாம்.

staying-young

காலை 8 மணிக்கு 5 இட்லி, அல்லது தோசை, அல்லது இடியாப்பம் என எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். மதியம் 1 மணிக்கு பகல் உணவும், இரவில் 8 மணிக்கும் இரவு உணவும் சாப்பிட வேண்டும்.

கண்டிப்பாக இரவு 10 மணிக்கு தூங்கிவிட வேண்டும். இது போன்ற உணவு வகையுடன், கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாமல் வாழ்ந்தால், நீங்கள் முதுமையிலும் இளமையாக வாழலாம்!.!!!.

அரிய பொது அறிவுத் தகவல்கள்

*ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.

*வைட்டமின் ஏ’-ன் வேதியியல் பெயர் “ரெட்டினால்”.
*சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
*இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்’, லக்னோவில் அமைந்துள்ளது.
*முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.!!!.

 
 
 
 

This post has been viewed 107 times