போலீஸ் கிரைம்

 

போலீஸ் கிரைம்

கொலை செய்யப்பட்ட தாயின் பிணத்தின் மீது விழுந்து அழுது புரண்ட குழந்தை

திருப்பூர் அருகே, கொலை செய்யப்பட்ட தாயின் பிணத்தின் மீது விழுந்து, அவளது ஒரு வயதுள்லள குழந்தை அழுது புரண்ட காட்சி நெஞ்சை தொடுவதாக இருந்தது.

728x410_15563_murder

திருப்பூர் அருகேயுள்ள செங்கப்பள்ளியில் உள்ள புறவழி சாலையில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.

பிணத்தின் அருகில் ஒரு வயதுள்ள ஆண் குழந்தை அழுது கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த குழந்தையை, பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துள்ளனர். இந்த பெண்ணை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.!!!.

சென்னை அருகே கொலை செய்யப்பட்டு
கிடந்த இளம் பெண் யார்? என்று தெரிந்தது

சென்னை அருகேயுள்ள பொத்தேரி ரெயில் நிலைய பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கழுத்து அறுபட்டு பிணமாக கிடந்தாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த பெண்ணின் பெயர் சாகிரா என்பதும், அவள் வேலூர் சைதைப்பேட்டை சின்ன மராட்டி தெருவை சேர்ந்தவள் என்பதும், அவள் தனது கணவனை பிரிந்து வாழ்ந்தாள் என்பதும், அவளுக்கு ஒரே ஒரு கைக்குழந்தை உள்ளது என்பதும் தெரிய வந்தது.

4DCBE39D-B00A-4C8E-931C-6FC94879D441_INLVPF

இந்த நிலையில், சாகிராவுக்கும், அவள் வாழ்ந்த அதே பகுதியை சேர்ந்த சாதிக் உசேன் என்ற 23 வயது திருமணமாகாத வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சாதிக் உசேன், சென்னை மாடம் பாக்கத்திலுள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சாதிக் உசேனிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, சாகிரா வற்புறுத்த, சாதிக் உசேன் மறுத்து விட்டார். இதனால், சென்னைக்கு வந்த சாகிரா, சாதிக் உசேனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சாதிக் உசேன், அவளை பொத்தேரி ரெயில் நிலைய பகுதிக்கு அழைத்துச் சென்று, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தப்பி ஓடி விட்டார். போலீசார் சாதிக் உசேனை கைது செய்து விசாரித்த போது, மேற்கண்ட தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.!!!.

 
 
 
 

This post has been viewed 93 times