துளிர் செய்திகள்

 

துளிர் செய்திகள்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சை செலவுக்கு
பணம் இல்லாத விரக்தியில் தாய் தற்கொலை

நாமக்கல்லை அடுத்த ராசிபுரம் பேளூகுறிச்சி பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி பெரியசாமி என்பவரின் மனைவி அன்புக்கொடி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.

Original Title: Aa_FC3_10a.jpg

 

இந்நிலையில் 6 மாத குழந்தை சர்வின் டெங்கு காய்ச்சல் காரணமாக, சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு, மருத்துவ மனையில் தனது குழந்தையின் சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத நிலையில், அன்பு கொடி தனது வீட்டுக்கு குழந்தையுடன் வந்துள்ளார். பணம் செலவு செய்து தன் குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்ததில் பேளுகுறிச்சி சந்தைப்பேட்டையில் உள்ள பொது கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.!!!..

18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில்
சபாநாயகர் பதில் மனு தாக்கல்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

high

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் அளித்தனர். இதில் ஒருவர், பின்னர் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி விட்டார். இதனையடுத்து சபாநாயகர் தனபால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து கடந்த செப்டம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 பேர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, 18 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார். அதே நேரத்தில், காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு அக். 4-ம் தேதி நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சபாநாயகர் தனபால் சார்பில் 500 பக்க பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம். எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க உரிய கால அவகாசம் அளிக்கப்பட்டது. சட்ட விதிகளின் படியே, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு கொறடா ராஜேந்திரன் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!!!!!.

புதிய ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்
6-ம் தேதி பதவி ஏற்கிறார்

மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். முதல்வர் ஜெயலலிதா மரணம், அதனைத் தொடர்ந்து எழுந்த அரசியல் நிலைமைகள் காரணமாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன.

bAnvari

இந்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரும் 5–ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வருகிறார்.

வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் பதவியேற்க உள்ளதாகவும், ஆளுநர் மாளிகையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆளுநருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.!!!..

ஆண்களே… சேலை கட்டி ரோட்டில் சென்று பாருங்கள்….!! கவுரியம்மா சொல்கிறார்……!!

“பெண்கள் படும் கஷ்டம் புரிய வேண்டும் என்றால், சேலை கட்டி தெருவில் நடந்து பாருங்கள்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அம்மாநில முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கவுரியம்மா அறிவுரை வழங்கி உள்ளார்.

GOWRI AMMA_0

98 வயதாகும் கவுரியம்மா கேரளாவில், 1957-ம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் அரசு அமைந்த போது, எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்., அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் திருவனந்த புரமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கவுரியம்மா, “நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது இரவு 10 மணிக்கு தனியாக ரோட்டில் நடந்து செல்வேன். ஆனால், தற்போது நிலைமை மாறி விட்டது. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் புரிய வேண்டும் என்றால், ஆண்களே, நீங்கள் சேலை கட்டி இரவில் ரோட்டில் நடந்து பாருங்கள்” என்று முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு சவால் விடுத்துள்ளார்.!!!.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு பற்றி, வியாபாரிகளிடம்
கருத்து கேட்டார், நாராயண சாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி நேரு வீதியில் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடை, ஓட்டல்கள் உள்ளிட்ட பல கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு நிலைமை குறித்து கேட்டறிந்தார். அப்போது சில வியாபாரிகள் “ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் வியாபாரம் குறைந்துள்ளது.

Narayanasamy-puducherry

 

வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் வரி விதிப்பு இருக்கக்கூடாது என்று நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற, நாங்கள் முழுமையாக நம்பி இருப்பது வணிக வரித்துறை வருமானத்தைதான். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் நான் உறுப்பினராக இருப்பதால், அடுத்த கூட்டத்தில் இது தொடர்பாக கோரிக்கைகளை எடுத்து சொல்வேன்” என தெரிவித்தார்.!!!.

 
 
 
 

This post has been viewed 107 times