சினிமா செய்திகள்

 

சினிமா  செய்திகள்

சமந்தா திருமண பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது “மெர்சல்”படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார், இப்படம் தீபாவளிக்கு வரவுள்ளது. மேலும், விஷால், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

samantha-prabhu-naga-chaitanya-6

இந்நிலையில் இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யதுக்கொள்ளப்போவது அனைவரும் அறிந்ததே, இதுக்குறித்து அவரே அறிவித்து இருந்தார். சமந்தாவிற்கு அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடக்கவுள்ளது.

அடுத்த நாளே நாகர்ஜுனா குடும்ப வழக்கப்படி திருமணம் நடக்க, அதை தொடர்ந்து அமெரிக்காவிற்கு ஒரு சில நாட்கள் “தேனீலவு” செல்லவுள்ளார்களாம். மேலும், இந்த திருமணத்தின் மொத்த செலவு ரூ 10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகின்றது.

2.0 எந்த நிலையில் உள்ளது ?
இப்போது என்ன நடக்கிறது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமின்றி அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

C6y2ja7WwAAnQgr

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிய தற்போது ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எடுத்து வருகின்றார்களாம். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து எடுத்து வர, இன்னும் ஒரு சில நாட்களில் 2.0 மொத்த படப்பிடிப்பும் முடிய படம் ரிலிஸிற்கு ரெடியாகவுள்ளது. 2.0 படம் இது வரை இந்திய சினிமாவே பார்த்திராத அளவிற்கு அதிக திரையரங்குகளில் படத்தை ரிலிஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவின் புதிய “டாட்டூ “ ஞ்சொல்ல வருவது என்ன?

நயன்தாரா தற்போதெல்லாம் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார். மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவரின் பிறந்தநாளை அமெரிக்காவில் இருவரும் கொண்டாடினர், இந்நிலையில் நயன்தாரா கையில் தற்போது புதிய “டாட்டூ” ஒன்று உள்ளது.

DLTIkdaUQAIvTs5

இதற்கு முன் அதில் தன் முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயர் இருந்தது, தற்போது அதை அப்படியே Positivity என்று மாற்றிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது. “காதல் தோல்வியை கூட றிPositivity -யாக மாற்றிய நயன்தாரா” என ரசிகர்கள் புகழ்ந்தும் வருகின்றனர்.

விஜய், அஜித் யார் பேவரட்? ரைஸா ஓபன் டாக்

“பிக்பாஸ்” நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ,ரைஸா. இதற்கு பிறகு இவருக்கு பல விளம்பரப்படங்கள் வந்து கொண்டு இருக்கிறது.

SSMusic-232

இதில் பிஸியாக இருக்கும் இவர் “பிக்பாஸ்” முடிந்து முதல் முறையாக பிரபல பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்தார். இந்த பேட்டி ரசிகர்களிடம் கேள்வி கேட்டு, அதை அவரிடம் கேட்பது போல் இருந்தது, இந்த பேட்டியில் ஓவியா, ஜுலி, காயத்ரி உடனான நட்பு குறித்து பேசியிருந்தார்.

மேலும், விஜய், அஜித் இதில் யார்பேவரட் ?என்று கேட்க? சில நொடி என்ன சொல்வது என்று தெரியாமல், பிறகு ’இரண்டு பேருமே ஹேண்ட்சமாக இருக்கின்றார்கள், ஏங்க என்னை பிரச்சனையில் சிக்க வைக்கின்றீர்கள்?’ என கூறி எஸ்கேப் ஆனார்.

“மெர்சல்”படத்திற்கு வேறு வழியில் பெரிய தடை !

“மெர்சல்” படம் விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கேளிக்கை வரி சினிமாவிற்கு 10% என அறிவித்துள்ளனர். இதனால், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருமே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

photo

இதை தொடர்ந்து அனைத்து தரப்பினரும் கூடி பேசி, கேளிக்கை வரியை எதிர்த்து இந்த தீபாவளி முதல் 6 மாவட்டங்களில் திரையரங்குகளை மூட முடிவெடுத்துள்ளார்களாம்.

தீபாவளிக்கு “மெர்சல்” படமும் வரும் அந்த சமயத்தில் இப்படி செய்தால் படத்தின் வசூலுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இவை படக்குழுவினர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 
 
 
 

This post has been viewed 154 times