வாழ்வின் அந்தரங்கம்

 

வாழ்வின் அந்தரங்கம்

* நான் ஒரு கல்லூரி மாணவி. நான் விரும்பும் வாலிபரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

* படிப்புக்கு காதலும், திருமணமும் இடையூறாக இருக்க கூடாது. விதைக்கும் காலத்தில் விதைத்தால்தான் அறுவடை காலத்தில் நெல்மணிகளை அறுக்க முடியும். அது போல படிக்கும் காலத்தில் படிப்புதான் முக்கியம். படித்து முடித்து, வேலைக்கு சென்ற பின் திருமணம் பற்றி யோசிக்கலாம்.!!!.

* எனக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், குழந்தை இல்லை. இப்போது என் கணவருக்கு 2–ம் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முயற்சி செய்கிறார்கள். எனது சம்மதத்தை கேட்கிறார்கள். இதற்கான “ஒப்புதல் பத்திரத்தில் கையெழுத்து போடு” என்று என் கணவர் என்னை வற்புறுத்துகிறார். நான் என்ன செய்வது? என்று தெரியாமல் தவிக்கிறேன்.

* உங்கள் கணவர் கேட்பது, சட்டவிரோதமானது. ஆனாலும், அவர் மீது உங்களுக்குள்ள நம்பிக்கையினாலும், அன்பினாலும், குழந்தை ஆசையினாலும் நீங்கள் சம்மதிக்க நினைக்கலாம். ஆனால், அதற்கு முன்னால், குழந்தையை கொடுக்கக்கூடிய தகுதி அவருக்கு இருக்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் இருவருமே, மருத்துவ ரீதியிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். அதன் முடிவுகள் எப்படி இருக்கிறது? என்று பாருங்கள். அதற்கு முன் கையெழுத்து போட்டு விடாதீர்கள்.!!!.

* எனக்கு இப்போது 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கு 3-வதாக ஆண் குழந்தை மீது ஆசையாக உள்ளது. உங்கள் ஆலோசனை என்ன?

* குழந்தை பேறு வைத்தியத்தில் நிபுணத்துவம் பெற்ற டாக்டரை பாருங்கள்.!!!.

* எனது மனைவி, தனது தாய் வீட்டுக்கே என்னை அழைக்கிறாள். கேட்டால், “நமது குடும்ப செலவு குறைந்து விடும். உங்கள் சம்பளத்தை அப்படியே நான் மிச்சப்படுத்தி விடுவேன்” என்கிறாள். இது சரியா? நடைமுறைக்கு ஒத்து வருமா?

* உங்கள் மனைவியின் தாய் வீட்டுக்கு சென்று வாழ்வது, சம்பளத்தை மிச்சப்படுத்தலாம் என்பது ஒரே காரணமாக இருந்தால், அது தவறு. மற்றபடி வயதான பெற்றோராக இருந்தால் சேர்ந்து வாழ்வது தவறு இல்லை.!!!.

 
 
 
 

This post has been viewed 220 times