போலீஸ் கிரைம்

 

போலீஸ் கிரைம்

கொலை வழக்கில் தேடப்பட்டவரை போலீசார்
துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்Roedy-1

தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபர் 2 கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். அவர், தூத்துக்குடியை அடுத்த அத்தி மரத்துப் பட்டி என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் ரென்னிஸ், காவலர் முத்து சாமி ஆகியோர் சென்றனர்.

முத்துக்குமாரை கண்டதும், அவரை சரண் அடையும் படி போலீசார் கூறினார்கள். ஆனால், முத்துக்குமார், போலீசாரை அரிவாளால் தாக்கி விட்டு, தப்பி ஓட முயன்றார். இதனைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் ரென்னிஸ், முத்து குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் ஓட முடியாமல் தவித்த முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ரென்னிஸ், காவலர் முத்து சாமி ஆகியோரும், குண்டு காயம் அடைந்த முத்துக்குமாரும், தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.!!!.

செங்கல்பட்டு அருகே ஆசிரியைக்கு கத்திக் குத்து :
மாணவனின் வெறிச்செயல்

kanchi-2

செங்கல்பட்டை அடுத்த திருக்கழுக்குன்றம் அருகே உள்ள சோகண்டியில் “லிட்டில் ஜாக்கி” என்ற தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்ற மாணவன் யோகேஷ் சரியாக படிக்கவில்லை என்றும் ஒழுங்கினமாக நடந்து கொண்டதாகவும் கூறி கடந்த மாதம் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் தான் நீக்கப்பட்டதற்கு ஆசிரியை பூங்கொடி தான் காரணம் என்று நினைத்துக்கொண்டு, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை, கத்தியால் குத்தியுள்ளான்.

இதனையடுத்து சக ஆசிரியர்கள் மாணவனை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவன் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த ஆசிரியை பூங்கொடி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரு வாரங்களுக்கு முன்பு மதுரை பல்கலைக்கழகத்தில் இதழியல்துறை பேராசிரியை ஜெஃனிபர் என்பவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், பள்ளி ஆசிரியை பூங்கொடி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.!!!.

 
 
 
 

This post has been viewed 132 times